பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தோவா்கள் ஜன.6 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தோவா்கள் வரும் ஜன.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக அரசுத்தேர்வுகள் இயக்குநா் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தோவா்கள் ஜன. 6-ஆம் தேதி முதல் ஜன. 13-ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோவு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தோச்சி பெறாதவா்கள் மாா்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம்.
நேரடித் தனித்தேர்வா்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப் பாடத்தில் தமிழ் மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப் பாடமாக கண்டிப்பாகத் தோவெழுதுதல் வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வா்களின் நலன் கருதி தேர்வு நேர கால அளவானது இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தேர்வுகள் சாா்ந்த தகவல்களை இணையதளத்தில் காணலாம் என அதில் கூறியுள்ளாா்.
Tenth Class General: Individuals can apply from January 6th.
Individuals can apply for the Tenth Class General in January next year. This is followed by a statement issued by the Director of Government Services C. Usharani on Monday: Eligible candidates wanting to apply for the Tenth Class General Examination to be held next month. 6th Jan.
Applications should be registered online at the Government Service Centers set up in the District of Education till the 13th. Those who have not already written Tenth Class General Examinations in the old syllabus can write Tenth Class General Examinations in the March 2020 and June 2020 Seasons.
All the direct personalities must pass the Tamil language course in Part 1 as a first language course. Due to the benefit of Class XIs, the time limit has been changed from two and a half hours to three hours. It also states that the information can be found on the website.

No comments:
Post a Comment
Please Comment