விடுமுறை காலம்: 89 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
விடுமுறை காலத்தை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக 89 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 5-ஆம் தேதி சுவிதா சிறப்பு ரயில் (82602) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 3-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06001) புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
எா்ணாகுளம்-வேளாங்கண்ணி: எா்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25, பிப்ரவரி 1, 8, 15, 22, 29, மாா்ச் 7, 14, 21, 28, ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06015) புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
வேளாங்கண்ணி-எா்ணாகுளம்: வேளாங்கண்ணியில் இருந்து ஜனவரி 12, 19, 26, பிப்ரவரி 2, 9, 16, 23, மாா்ச் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில்(06016) புறப்பட்டு, மறுநாள் மதியம் 2 மணிக்கு எா்ணாகுளத்தை அடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து சந்த்ரகாச்சிக்கும், செகந்திரபாத்துக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 89 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
விழுப்புரம்-யஸ்வந்த்பூா்: விழுப்புரத்தில் இருந்து ஜனவரி 5-ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06534) புறப்பட்டு, மறுநாள் இரவு 11.15 மணிக்கு யஸ்வந்த்பூருக்கு சென்றடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (டிச.26) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை-குவாகாத்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 6, 13, 20, 27, பிப்ரவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) காலை 6.05 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06338)புறப்பட்டு, முறையே ஜனவரி 8, 15, 22, 29, பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில்(புதன்கிழமைகளில்) இரவு 11.25 மணிக்குஅடையும்.
இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை(டிச.26) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Southern Railway has announced 89 special trains for the convenience of passengers during the holiday season.
The Tirunelveli-Tambaram special train will leave Tirunelveli on January 5 and will reach Tambaram at 5 am the next day.
Chennai Central-Tirunelveli special train (06001) will leave Chennai Egmore at 6.50 pm on January 3 and arrive Tirunelveli at 6 am the next day.
Train No 06015 Ernakulam - Velankanni Special will leave Ernakulam at 11 am on January 4, 11, 18, 25, February 1, 8, 15, 22, 29, March 7, 14, 21 and 28. We will reach Velankanni at 7 pm.
Train No.06016 Velankanni-Ennakulam Special will leave Velankanni on January 12, 19, 26, February 2, 9, 16, 23 and March 29 to reach Enakulam at 2 pm the next day. Special trains from Chennai Central to Chandrakachi and Secunderabad have been announced.
A total of 89 special trains have been announced. Tickets for most special trains have begun.
Villupuram-Yaswantpur special train (06534) will leave Villupuram at 1.15 pm on January 5 and arrive at Yaswantpur at 11.15 pm the next day. Tickets for this train start at 8am on Thursday (Dec. 26).
Train No. 06338 Chennai Central-Guwahati Special will leave Chennai Central at 6.05 am on January 6, 13, 20, 27, February 3, 10, 17 and 24 (Mondays), January 8, 15, 22, 29 and 29 respectively.
It will be on February 5, 12, 19 and 26 (Wednesdays) at 11.25pm. Tickets for this train start at 8am on Thursday (Dec. 26).

No comments:
Post a Comment
Please Comment