8 வயதில் ரூ.184 கோடி சம்பாதிக்கும் அமெரிக்க சிறுவன் US boy earns Rs 184 crore at age 8 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

8 வயதில் ரூ.184 கோடி சம்பாதிக்கும் அமெரிக்க சிறுவன் US boy earns Rs 184 crore at age 8

8 வயதில் ரூ.184 கோடி சம்பாதிக்கும் அமெரிக்க சிறுவன் US boy earns Rs 184 crore at age 8

‘யூ டியூப்’ சேனலில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை 


யூ டியூப் சேனல்களை தொடங்கி உலக அளவில் பல பேர் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்து வரு கின்றனர். பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அந்த சேனல்களை நிர்வகிப்பவர்களுக்கு 'யூ டியூப்' நிறுவனம் பணம் வழங்கும். 


 இதுபோல், யூ டியூப் சேனல் களை நிர்வகிப்பவர்கள் ‘யூ டியூ பர்ஸ்' என அழைக்கப்படுகிறார்கள். நடப்பாண்டில் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் ‘யூ டியூ பர்ஸ்' பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் முதலிடத்தை பிடித்திருக்கிறான். ஆண்டுக்கு 26 மில்லியன் (ரூ.184 கோடி) அவனது ஊதியமாக இருக் கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் ரியானுக்கு, பிறந்தது முதலாகவே பொம்மைகள் மீது அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. 


பின்னர் நடக்க தொடங்கிய பருவத்தில், விதவித மான பொம்மைகளை வைத்து புதுவகையான விளையாட்டுகளை செய்திருக்கிறான். அவனது இந்த செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தினமும் காலையில், அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறுவன் ரியானின் வீட்டுக்கு வந்து, அவன் பொம்மைகளுடன் விளையாடு வதை ரசித்து வந்திருக்கின்றனர். 


ஒருமுறை, ரியானின் இந்த பொம்மை விளையாட்டுகளை வீடியோ படம்பிடித்து அவனது தந்தை யூ டியூபில் பதிவிட்டிருக் கிறார். பின்னர், சிறிது நாட்களுக்கு பிறகு அந்தப் பதிவை பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந் தது. வீடியோ பதிவிட்ட நான்கே நாட்களில், சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அதனை பார்த் திருந்தனர். 



 இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு சொந்தமாக யூ டியூப் சேனலை தொடங்கி, ரியானின் வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். ‘ரியான் வேர்ல்ட்' என்ற சேனலில் பதிவிடப்படும் இந்த வீடியோக்களை லட்சக்கணக் கானோர் பார்த்து வருவதால் அவருக்கு யூ டியூப் நிறுவனம் மாதந்தோறும் கோடிக்கணக்கில் பணம் வழங்கி வருகிறது. தற்போது 8 வயதை எட்டியுள்ள சிறுவன் ரியான், பொம்மை விளை யாட்டுகள் மட்டுமின்றி சிறிய அளவி லான அறிவியல் பரிசோதனை களையும் செய்து வருகிறான். இதுதொடர்பான வீடியோக்களும் யூ டியூபில் வைரலாகி வருகிறது.

US boy earns Rs 184 crore at age 8

Record, gaining millions of viewers on YouTube's YouTube channel

Many people worldwide are making millions by starting YouTube channels. Depending on the number of viewers, 'You Tube' will pay for those who manage those channels. Similarly, those who manage YouTube channels are known as 'YouTube purse'. Forbes magazine has released a list of the highest paid payers worldwide in the current year. 

In it, an 8-year-old boy from the US, Ryan Gaji, tops the list. He earns 26 million rupees ($ 184 crore) a year. Ryan, a boy from Texas, USA, has had a lot of interest in toys since he was born. Later in the season, he has made new games with a variety of toys. His work has attracted the attention of all. Every morning, upstairs, the boys come to Ryan's house and enjoy playing with his toys. Once, Ryan filmed a video of these toy games that his father posted on YouTube. 


Later, a few days later, he was surprised to see the record. In the four days since the video was posted, more than 1 lakh people have watched it. After that, he started posting his own YouTube channel in 2015 and has been posting videos of Ryan. 

Conor is watching millions of these videos, which are posted on Ryan World's channel, and is being paid by YouTube company monthly. Ryan, who is now 8 years old, is doing not only dolls but also small scale experiments. Related videos are also going viral on YouTube.

No comments:

Post a Comment

Please Comment