5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இருப்பினும், தமிழகத்தில் ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை அறிவித்தது தமிழக பள்ளிக் கல்வித்துறை.
அதன்படி, ஐந்தாம் வகுப்பு தேர்வு, 15.4.2020-ல் தொடங்கி, 20.4.2020 ல் முடிவடைகிறது. எட்டாம் வகுப்பு தேர்வு, 30.3.20-ல் தொடங்கி, 17.4.20-ல் முடிவடைகிறது.
ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்கும், எட்டாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறையினை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்றாண்டுகளுக்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையச் செய்யமாட்டார்கள் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
5th & 8th Class Public Exam Date Announced!
The Public Exam date for fifth and eighth Standard has been announced.
It was announced that the fifth and eighth grades will be held under the new education policy. There was strong opposition throughout Tamil Nadu. However, there is a Public Exam for fifth and eighth grades in Tamil Nadu. The Tamil Nadu School Education Department has announced the 5th and 8th Public Exam dates.
Accordingly, the Fifth Class Examination commences on 15.4.2020 and ends on 20.4.2020. The eighth standard exam, beginning at 30.3.20 and ending at 17.4.20. There are three subjects - Tamil, English, Account, Fifth standard, and 5 subjects - Tamil, English, Accounting, Science and Social Sciences.
The Department of Education has introduced the Public Exam for Fifth and Eighth Standard based on amendments to the Right to Education Act of the Central Government. The government has already announced that students will not fail the exam for three years even if the Public Exam is held.

No comments:
Post a Comment
Please Comment