வரலாற்றில் இன்று 20-12-2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 20-12-2019

*🔵நாடும் ⚖ நடப்பும்*

*🇪🇬 வரலாற்றில் இன்று 🇪🇬*


              _*🌹வெள்ளி 🌹*_

*✍பதிவு நாள்:  20-12-2019*

*கிரிகோரியன் ஆண்டின் 354 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 355 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான்.

🖌217 – முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார்.

🖌1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்.

🖌1334 – பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🖌1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.

🖌1803 – பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

🖌1808 – இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது.

🖌1832 – போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது.

🖌1844 – இலங்கையில் அடிமைகளைப் பணிக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.[1]

🖌1860 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.

🖌1915 – முதலாம் உலகப் போர்: கடைசி ஆத்திரேலியப் படையினர் கலிப்பொலியில் இருந்து வெளியேறினர்.

🖌1917 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.

🖌1924 – இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

🖌1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தன்னார்வப் படை "பறக்கும் புலிகள்" சீனாவில் குன்மிங் நகரில் முதலாவது சமரை நிகழ்த்தியது.

🖌1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.

🖌1943 – பொலிவியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

🖌1948 – புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுப் படைகள் கைப்பற்றின.

🖌1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடஹோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.

🖌1952 – ஐக்கிய அமெரிக்க வான்படை விமானம் வாசிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர்.

🖌1955 – கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

🖌1957 – போயிங் 707 விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.

🖌1971 – எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.

🖌1973 – எசுப்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மத்ரித் நகரில் வாகனக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

🖌1984 – இங்கிலாந்தில் பெனைன்சு மலைத்தொடர் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

🖌1985 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உலக இளையோர் நாளை ஆரம்பித்து வைத்தார்.

🖌1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் உயிரிழந்தனர்.

🖌1988 – போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.

🖌1989 – பனாமாவின் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.

🖌1995 – நேட்டோ பொசுனியாவில் அமைதி காக்கும் பணியைத் தொடங்கியது.


🖌1995 – அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 159 பேர் உயிரிழந்தனர்.

🖌1999 – மக்காவு போர்த்துகலிடம் இருந்து சீனாவிடம் கைமாறியது.

🖌2000 – மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

🖌2004 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து £26.5 மில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது.

🖌2007 – இரண்டாம் எலிசபெத் அதிக காலம் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்த பெருமையைப் பெற்றார்.

*🔵பிறப்புகள்*

🖌1876 – வால்ட்டர் சிட்னி ஆடம்சு, அமெரிக்க வானியியலாளர் (இ. 1956)

🖌1886 – அ. வேங்கடாசலம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1953)

🖌1901 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர், வான் டி கிராப் நிலை மின்னியற்றியைக் கண்டுபிடித்தவர் (இ. 1967)

🖌1920 – கனகசபை சிவகுருநாதன், இலங்கை எழுத்தாளர், சமூக சேவையாளர் (இ. 2003)

🖌1923 – அ. சிவானந்தன், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர், சமூக, அரசியல்செயற்பாட்டாளர் (இ. 2018)

🖌1937 – வேலா அரசமாணிக்கம், தமிழ்ப் பேச்சாளர், இதழாசிரியர் (இ. 1991)


🖌1940 – யாமினி கிருஷ்ணமூர்த்தி, பரதநாட்டிய, குச்சிப்புடி நடனக் கலைஞர்

🖌1941 – பா. ரா. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர், தமிழறிஞர்

🖌1949 – ராஜேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர்

🖌1960 – எஸ். ஜி. சாந்தன், ஈழத்து மெல்லிசைப் பாடகர், நாடகக் கலைஞர் (இ. 2017)

🖌1976 – யுகேந்திரன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்

🖌1987 – பார்வதி ஓமனகுட்டன், இந்திய, மலையாள நடிகை

🖌1994 – ஹரிணி ரவி, பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் வழங்குனர்

*🔵இறப்புகள்*

🖌217 – செஃபிரீனுஸ் (திருத்தந்தை)

🖌1921 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (பி. 1852)

🖌1969 – ஆர். எஸ். சுபலட்சுமி, பெண்ணியவாதி, சமூக சீர்திருத்தவாதி (பி. 1886)

🖌1993 – வில்லியம் எட்வர்ட்சு டெமிங், அமெரிக்க புள்ளிவிபரவியலாளர், நூலாசிரியர் (பி. 1900)

🖌1994 – சிறில் பொன்னம்பெரும, இலங்கை அறிவியலாளர் (பி. 1923)

🖌1996 – கார்ல் சேகன், அமெரிக்க வானியற்பியலாளர், அண்டவியலாளர் (பி. 1934)

🖌2002 – குரோட் இரெபெர், ஆத்திரேலிய-அமெரிக்க கதிர்வீச்சு வானியலாளர் (பி. 1911)

🖌2010 – கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1914)

*🔵சிறப்பு தினம்*

🖌அடிமை ஒழிப்பு தினம் (ரீயூனியன், பிரெஞ்சு கயானா)

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment