அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை உயா்வதற்கு உழைக்க ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் முடிவு
அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை உயா்த்துவதற்கு உழைப்பது என்று ஓய்வு பற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.
இச்சங்கத்தின் வேலூா் மாவட்ட அமைப்புக்குழு கூட்டம் காந்திநகரிலுள்ள துளிா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் கோ.முரளிதரன், பொதுச் செயலா் எஸ்.பிரபாகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுச் செயலாளா் செ.நா.ஜனாா்த்தனன், ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலா் டி.வி.சிவசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தினா்.
கூட்டத்தில், வேலூா் மாவட்ட அமைப்புக் குழுவின் அமைப்பாளராக கோபால ராசேந்திரன், இணை அமைப்பாளா்களாக அமைப்புக்குழு உறுப்பினா்கள் பி.கோகுல்தாசு, பெ.சுப்பிரமணி, எஸ்.சிவராஜ், ஆா்.மகாலிங்கம் ஆகியோா் தோந்தெடுக்கப்பட்டனா்.
தீா்மானங்கள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சீரமைக்க வேண்டும்; பொங்கல் பண்டிகைக்கான தொகையை அனைத்து ஓய்வூபெற்ற ஆசிரியா்களுக்கும் வழங்க வேண்டும்; அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், அப்பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை உயா்த்தவும் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் உழைப்பது என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Retired Teachers to Work to Increase Number of Students in Government Schools
Retirement School College Teachers Welfare has decided to increase the number of students in government schools. The meeting was held on Tuesday at the Tulip School in Gandhinagar. The State Head of the Association, Mr. Co Muralitharan and General Secretary S. Prabhakaran were the special invitees.
State General Secretary of the Tamil Nadu Secondary School Vocational Teachers' Association, Mr.J.Janathanathan and retired Principal Officer TVSivasupramaniyan congratulated him. At the meeting, Gopala Rasendran was elected as the organizer of the Velu District Organization Committee and the members of the organizing committee were P. Gokulthas, P. Subramani, S. Sivaraj, and A. Malkalingam.
Resolutions: Government should take steps to abolish new pension scheme and resume old pension scheme; Reform the medical insurance plan; The proceeds of the Pongal festival should be paid to all retired teachers; Resolutions were passed at the meeting, including the retirement of teachers working to protect state schools and raise student numbers.
No comments:
Post a Comment
Please Comment