ப்பா!! முந்திரி பருப்புல இவ்ளோ மேட்டரு இருக்கா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ப்பா!! முந்திரி பருப்புல இவ்ளோ மேட்டரு இருக்கா?

ப்பா!! முந்திரி பருப்புல இவ்ளோ மேட்டரு இருக்கா? 



முந்திரி பருப்பில் உள்ள ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு இதில் எண்ணற்ற விட்டமின்களும் தாதுக்களும் அடங்கியுள்ளன. இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது. 

இதில் அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் களைப்படையாமல் உற்சாகமாக இருப்பீர்கள். முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் அதிகளவில் ட்ரைப்டோபோஃன் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பை தூண்டி மனநிலையை அமைதியாக்குகிறது. 

மேலும் ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டா பாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது. இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது. எனவே இதை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம்.

இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. இதில் உள்ள லுடின் மற்றும் ஜேக்ஸாந்த்தின் பொருள் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் காக்கிறது. அதே நேரத்தில் கண்புரை வராமல் தடுக்கிறது. 

 மட்டுமின்றி சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை கூட வாய்பில்லை. வால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில் ஏற்படுத்துவதில்லை. பெண்கள் ஒரு அவுன்ஸ் (4 கிராம்) அல்லது 10% அளவு தினமும் இதை எடுத்து வந்தால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். 

எனவே நீங்கள் சரியான அளவில் முந்திரி பருப்பை எடுத்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பை எடுத்தாலே போதும் உங்கள் உடல் எடையை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ளலாம்.

இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது. ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பை எடுத்தாலே போதும் உங்கள் உடல் எடையை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ளலாம்.


Ppa !! Is cashew papula elo mater?

It contains countless vitamins and minerals, along with nutrients such as omega-3 alpha-linoleic acid and monounsaturated oleic acid. It contains good nutrients and antioxidants that are good for our heart. With so much protein in it, you won't be tired all day long. Cashews are rich in vitamin C, thiamin, vitamin B6, magnesium, zinc, copper, iron and potassium. 

It is rich in tryptophan amino acid, which stimulates serotonin secretion and calms the mood. It also helps to balance the hormone, increase the meta-policy and maintain a healthy body. It is high in fiber and does not make us hungry for long. So take this as a snack all day and keep your stomach hungry. 

It contains copper and iron which helps in the production of red blood cells, immune system, healthy bone and body function. The material of lutein and zeaxanthin contained in it protects the eyes from light. At the same time prevent cataracts. Also, when taken in the right quantity, body weight is not good. 

Walnuts, almonds, and dried grapes do not affect body weight as much as cashew nuts. If women take one ounce (4g) or 10% daily, it will help reduce appetite and keep the weight off. So if you take the right amount of cashew nuts, your body weight will not change. 

Just a handful of cashew nuts can keep your body weight in your hand. It is good for our heart as it contains healthy fat and antioxidants. Just a handful of cashew nuts can keep your body weight in your hands.

No comments:

Post a Comment

Please Comment