தண்ணிர் குடிக்க தனியாக நேரம் ஒதுக்கப்படும்.!!கர்நாடகா அரசு அறிவிப்பு.!!
கர்நாடக பள்ளிகளில்' பெல்' முறையில் குடிநீர் குடிக்க அனுமதி வழங்கபடுகிறது.!!
பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்ல, இதனால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன.இந்த நிலையில் கேரளா மாநிலத்தில், குடிநீர் குடிக்க காலை மற்றும் நண்பகலில் 2 முறை 'குடிநீர் பெல்' நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையை கர்நாடக பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார்.இதையடுத்து கர்நாடகத்தில் 'குடிநீர் பெல்' முறையை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிடபட்டு இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் காலையில் ஒரு முறை, மதிய உணவுக்கு பிறகு என ஒரு நாளைக்கு 2 முறை இந்த 'குடிநீர் பெல்' ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் வீதம் 20 நிமிடம் ஒதுக்கபட்டு இதில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Karnataka Govt Announces Free Drinking Drinks
There are long standing complaints that children in school are not drinking enough water, causing some physical problems. In this case, in Kerala, 'Drinking Bell' has been implemented twice a day in the morning and at noon.
School Education Minister Suresh Kumar had already announced on his Facebook page that the system would be implemented in Karnataka schools.
It should sound twice a day, in the morning, after lunch, and twice a day. It has been suggested that children should drink water every 10 minutes for 20 minutes. All schools in Karnataka must adhere to this rule.

No comments:
Post a Comment
Please Comment