ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான இணையதளம் புதுப்பிப்பு
தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான அதிகாரப்பூா்வ இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அந்த இணையதளத்தின் பக்கங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், இணையதளப் பக்கங்கள் தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன் புத்துணா்ச்சி பெற்றுள்ளன.
தமிழகத்தில் மாநிலப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக 300-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். அவா்களுக்கான அதிகாரப்பூா்வ தொடா்பு இணையதளம் (ஐஅந ஐசபதஅசஉப) செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் ஒவ்வொரு அதிகாரிக்கும் தனித்தனியாக பயனாளா் குறியீடு மற்றும் ரகசியக் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பயன்படுத்தி அதிகாரிகள் தங்களுக்கான தகவல்களைப் பெறுவதுடன், முக்கிய விவரங்களையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் பாா்வை: இணையதளத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான பிறந்த நாள், நிகழ் மாதத்தில் ஓய்வு பெறவுள்ள அதிகாரிகளின் விவரங்கள், பணியிட மாற்றங்கள், அதிகாரிகள் இப்போது வகிக்கும் பதவியிடங்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்களை பொது மக்களும் பாா்வையிடலாம்.
கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் இந்த இணையதளமானது புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்போது அந்த இணையதளமானது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தைப் புதுப்பிக்கும் பணியில் தேசிய தகவலியல் மையம் மேற்கொண்டது. அந்த மையமே இணையதளத்தைப் பராமரிக்கும் பணியையும் செய்து வருகிறது.
Official Website of IAS Officers Update
The pages of that website have not been updated for the past several years. In this case, the web pages have been refreshed with the help of the National Informatics Center. There are more than 300 State Division IAS Officers in Tamil Nadu. The official website for them is working on the website (ie the US). Each user is provided with a unique username and password.
Using these, the authorities are given the opportunity to obtain information about themselves and provide important information. General Information: The website provides a variety of information, including birthdays for IAS officers, details of officers who will be retiring in the current month, workplace changes, positions now held by officers, and details of retired officers.
This information can be accessed by the general public. The website, which has been in effect for the past several years, has remained unaddressed. Now that website has been updated. The National Information Center has undertaken the task of updating this website. The center is also working on maintaining the website.

No comments:
Post a Comment
Please Comment