மத்திய அரசு பள்ளிகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: ராமதாஸ் பாராட்டு
சென்னை: கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளிகள் அளவில் OBC இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படுவது புரட்சிகரமான செயலாகும்.
வாழ்க சமூகநீதி!
பள்ளிகள் நிலையில் OBC இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்யவுள்ள மத்திய அரசு, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு OBC இடஒதுக்கீடு இல்லை என்ற குறையை போக்க வேண்டும். அந்த இடங்களுக்கும் OBC இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்து சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Reservation for OBCs in Central Government Schools: Ramadas Prathusen Sen:
Founder of Ramadas has congratulated the OBC faction in Central Government schools including Kendriya Vidyalaya. On Thursday, he posted on his Twitter page: "The Central Government is pleased to announce the reservation of other Backward Classes in Kendriya Vidyalaya and Jawahar Navodaya Vidyalaya Schools."
The introduction of OBC reservation at schools level is revolutionary. Live Social Justice! The Central Government, which is introducing OBC reservation in schools, should reduce the lack of OBC reservation for All India reservation seats for medical studies. Introduce OBC reservation to those places and protect social justice! Thus he has posted.

No comments:
Post a Comment
Please Comment