வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்ப்பதற்கான சிறப்பு முகாம் வரும் ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது 6 கோடியே 1,329 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287, பெண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118, மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 924 பேர் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார்.
Draft Voter List to be released tomorrow
Draft voter list in Tamil Nadu will be released on Monday.
A special camp to check the names and names of voters will be held on January 4, 5, 11 and 12, Chief Election Officer of Tamil Nadu Satyapratha Sahu said.
According to the list of sub-voters released on the 17th, the number of voters in Tamil Nadu has exceeded 6 crore.
There are currently about 6 crore 1,329 voters. Out of this, the male electorate are 2 crore 96 lakh 46 thousand 287, female voters 3 crore 49 thousand 118, third sex 5 thousand 924.
The Chief Electoral Officer of Tamil Nadu Satyapratha Sahu has announced that a voter list checking camp will be held on January 4, 5, 11 and 12.

No comments:
Post a Comment
Please Comment