TET தேர்ச்சி பெறாத  ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TET தேர்ச்சி பெறாத  ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

TET தேர்ச்சி பெறாத  ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,757 பேரின் விவரங்களை சேகரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையிட்டுள்ளது. 

அனைவருக்கும் கல்வி இயக்க விதிகளின்படி அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருவதால், தங்களை உடனடியாக பணி நீக்கம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் அந்த ஆசிரியர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அச்சம் தேவையற்றது தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது. 

அந்த வழக் கில் தீர்ப்பு வரும் வரை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. அதனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்க முடியாது. அதனால் அவர்களின் அச்சம் தேவையற்றது. இந்நிலையில் இப்போது எந்தத் தேவையும் இல்லாமல் இத்தகைய கணக்கெடுப்பை தமிழக அரசு எடுப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பள்ளிக்கல்வித் துறையின் கணக்கெடுப்பால்தான் ஆசிரி யர்களிடம் பதற்றமும் அச்சமும் நிலவு கிறது.

 எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதித் தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கும் நோக்கம் இக்கணக்கெடுப் பின் பின்னணியில் இல்லை என்ற உண்மையை விளக்கி ஆசிரியர்களிடம் நிலவும் அச்சத்தை அரசு போக்க வேண் டும். கடந்த 8 ஆண்டுகளில் 16 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5 முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 1,757 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாததற்கு இது முக்கிய காரணம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு வேறு வகையில் அவர்களின் கற்பித்தல் திறனை மதிப்பீடு செய்து அனைத்து ஆசிரியர்களும் பணியில் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Govt founder Ramadas urges the government of Tamil Nadu

Tamil Nadu founder Ramadas has urged the Tamil Nadu government to ensure that teachers who do not pass the qualifying exam remain in the job. In a statement released yesterday, the school department has said that it has collected 1,757 persons who have not passed the qualifying examination of teachers working in government-aided schools in Tamil Nadu. 

There have been fears that teachers who do not succeed in the qualifying examination introduced by the rules of education for all can be fired. Fear is unnecessary The Tamil Nadu government's decision to sack undecided teachers has been filed in the Madras High Court. Subsequently, the Supreme Court has imposed an interim injunction to sack incompetent teachers. Teachers cannot be fired until the verdict is reached. Thus, teachers who do not pass the qualifying examination cannot be fired. So their fears are unnecessary. 

The question now arises as to why the Tamil Nadu government should take such a survey without any necessity. The school department's survey is a source of anxiety and fear for the Asiri people. Therefore, the government has to overcome the fear of teachers by explaining the fact that the purpose of firing incompetent teachers in government aided schools is not behind the calculation. Teacher qualifications have been held 16 times in the last 8 years. But only 5 have been qualified. 

This is one of the main reasons why 1,757 teachers failed to qualify. In view of this, the government should ensure that all teachers remain on the job, otherwise evaluating their teaching skills. According to Ramadas.

No comments:

Post a Comment

Please Comment