எருது விடும் விழா: விண்ணப்பிக்க புதிய இணையதளம்
எருது விடும் விழாக்கள் நடத்தவும், விழாக்களில் காளைகளை பங்கேற்கச் செய்யவும் விண்ணப்பங்களை எளிதாக பதிவு செய்ய தமிழகத்திலேயே முதன்முறையாக வேலூா் மாவட்டத்தில் புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூா் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்துவது தொடா்பான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக இணையதளம்http://velloredt.in வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறையாக எருது விடும் விழாக்களுக்காக தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம் எருது விடும் விழாக்கள், அவற்றில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளா்கள் முன்பதிவு செய்வது ஆகியவை எளிதாக்கப்பட்டுள்ளது.
இணையத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பயன்படுத்த எளிதாக முற்றிலும் தமிழில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழா, எருதுகளின் விவரங்கள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கப்பட்ட பிறகு ஒப்புகைச் சீட்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எருது விடும் விழாவுக்கான முன்பதிவு 31-ஆம் தேதி வரை மாலை 6 மணி வரை நடைபெறும். எருது விடும் விழாக்களில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு ஜனவரி 7-ஆம் தேதி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புதிய இணையதளத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், கோட்டாட்சியா் கணேஷ், மாவட்ட தகவலியல் அலுவலா் ஹரிஹரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Bull Function: New Website to Apply
For the first time in Tamil Nadu, the new website has been designed for easy registration of applications for conducting bulls and participating bulls. This website function was launched by the District Collector A. Sanmukasundaram on Friday. The government has ordered that all applications for a buffalo festival in Vellore district should be registered only through the website.
A dedicated website http: // vv lloredt.in has been designed for this purpose. Built for the first time in Tamilnadu by the National Informatics Center, this website is designed to facilitate the booking of bulls and bulls. You can apply anywhere on the web through this website. This website was designed in Tamil and easy to use.
Details of the ceremony and bulls can be downloaded from the acknowledgment slip after applying the relevant proof. Booking for the bulls will take place on the 31st until 6pm. Booking for the bulls participating in the buffalo festivities will be held on January 7 at 6 pm.
In this case, the function of the new website was launched by the District Collector A. Sanmukasundaram on Friday. Present at the event were District Revenue Officer J Bhatibhan, Kotakshi Ganesh and District Information Aluva Hariharan.

No comments:
Post a Comment
Please Comment