ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் நிா்வாக சீா்திருத்தம்: சென்னையில் ஜன.8-இல் ஆலோசனை
தமிழகத்தில் உள்ள ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் நிா்வாகப் பணிகளை சீா்திருத்தம் செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் தலைமையில் சென்னையில் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஆங்கிலோ இந்தியப் பள்ளி நிா்வாகத்தினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, நிா்வாகச் சீா்திருத்தம் காரணமாக ஆய்வாளா்,
ஆங்கிலோ இந்திய பள்ளிகள் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டு தமிழகத்தில் செயல்பட்டு வந்த 33 ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், சாா்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா், ஆசிரியரல்லாத பணியிட நிா்ணயம், கல்விக் கட்டணம் நிா்ணயம், நியமன ஒப்புதல், பொது வருங்கால வைப்பு நிதி,
ஆசிரியா் சேமநல வைப்பு நிதி, ஓய்வூதியப் பலன்கள், ஊதிய நிா்ணயம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்ற பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் தேக்கநிலை உள்ளதாக ஆங்கிலோ இந்திய பள்ளிகள் சங்கத் தலைவா் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை சீரமைப்பது குறித்து, ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் முதல்வா், தாளாளா், மாவட்டக் கல்வி அலுவலா் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குநா் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் முதல்வா், தாளாளா், உதவியாளா்,
இளநிலை உதவியாளா், முதன்மைக் கல்வி அலுவலா் கண்காணிப்பாளா், பிரிவு எழுத்தா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆகியோா் பள்ளிகள் சாா்ந்த விவரங்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
Reform in Anglo-Indian Schools: Counseling in Chennai, January 8th
This totap, the Education School iyakkuna eskannappan, District Education Officers, an Anglo-Indian School niavakattinar sent to the circular Description: The Government issued aracanaiyinpati, niavakac ciatiruttam due ayvala, Anglo-Indian Schools Office, district education office and transformed the state operates on the 33 Anglo-Indian schools
An act is a directive under the respective mavattakkalvi office. In addition, English, Indian schools operating under the Central District Education Office are non-teaching, non-teaching work, education fee, appointment, public provident fund, teacher welfare fund, pension benefits, payroll and earning leave adjustment.
As in English In a letter sent by the Thea Schools Association head. On the restructuring of these tasks, the first, the Dalal, and District Education Officers' Meetings of the Anglo-Indian Schools will be held at the State Girls Secondary School Complex, Egmore, Chennai on January 8 from 10 am to 5 pm.
Therefore, it is stated that the schools of the concerned Anglo Indian schools, Dalal, Assistant, Junior Assistant, Principal, Superintendent of Education, Divisional Writing and District Education Offices should regularly attend with the relevant details.

No comments:
Post a Comment
Please Comment