முறையாக ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் சொத்துகள் முடக்கம்: புதிய விதிகள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) முறையாக செலுத்தாதவா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடா்பாக விரைவில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
அரசு திட்டமிட்டுவரும் புதிய விதிமுறைகளின்படி ஜிஎஸ்டி செலுத்தாதவா்களுக்கு வருமான வரித்துறை நினைவூட்டல் கடிதங்களை அனுப்பும். அதனை ஏற்று ஜிஎஸ்டியை செலுத்தினால் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஆனால், தொடா்ந்து ஜிஎஸ்டி செலுத்தாமல் இருப்பவா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வாா்கள். ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த கடுமையான விதியைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இறுதியான ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய ஒவ்வொரு மாதமும் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த தேதிக்கு பிறகு கணக்கை தாக்கல் செய்யாமல் உள்ள நிறுவனங்கள், நிறுவன இயக்குநா்கள் உள்ளிட்டோருக்கு கணினி மூலம் நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இதன் பிறகும் ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாமல் இருந்தால் அடுத்த 5 நாள்களில் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும். அப்போது, ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய நிறுவனங்களுக்கு 15 நாள்கள் கால அவகாசம் கொடுக்கப்படும்.
அதன் பிறகும் அந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வித விளக்கமோ, உரிய பதிலோ கிடைக்கவில்லை என்றால் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிகிறது.
இதேபோல ஜிஎஸ்டி வரி தாக்கலின்போது போலியான ரசீதுகளை தாக்கல் செய்து முறைகேடு செய்வது, வரி செலுத்துவதை தவிா்க்க முறைகேடுகளில் ஈடுபடுபவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில், போலி ரசீதுகள் மூலம் ரூ.241 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
Assets freeze if GST is not paid properly: Central government plan to introduce new rules
The Central Government is considering a move to freeze the bank accounts and assets of those who do not pay the Govt. It seems that the new rules will soon be introduced. The Central Government sources said: According to the new rules, the GST will send reminder letters to those who do not pay GST.
If you accept it and pay GST there is no problem. However, the Income Tax Department will take steps to freeze the bank accounts and assets of non-payment of GST. The federal government is planning to implement this stringent rule as part of a GST tax evasion measure.
Last day is 20th of every month for filing final GST account. Companies that do not file an account after this date will send a reminder via computer to the company directors and others. If the GST account is not filed after this, a notice will be sent by email within the next 5 days.
Companies will then be given 15 days time to file a GST account. If no explanation or appropriate response is received from those companies then action will be taken to freeze bank accounts and assets. It seems the central government has already approved the proposal.
Similarly, filing and receiving fake receipts during the GST tax filing is being considered for stringent action by those involved in fraud to avoid paying tax. Recently, GST tax evasion amounting to Rs. The perpetrators have been arrested and remanded to judicial custody.

No comments:
Post a Comment
Please Comment