இன்றைய கல்வி செய்திகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய கல்வி செய்திகள்

*🔥  Today KALVINEWS 🔥*


*2050 மார்கழி 12 ♝ &   28•12•2019*


🛡தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் சோக்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணமாக ரூ.304 கோடி வழங்குமாறு அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியுள்ளது


🛡அரையாண்டு விடுமுறையில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது


🛡ஜனவரி 16-ம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்


🛡தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும்


🛡வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வருகிற ஜனவரி 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


🛡நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

No comments:

Post a Comment

Please Comment