"தமிழி" எழுத்துகளை ஆர்வமுடன் கற்கும் மாணவர்கள்!
கரூரில் சங்க கால வடிவமான தமிழி எழுத்துக்களை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மூலம் தமிழ் பிராமி 6ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெரியவந்துள்ளது. 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் தொடர்ந்து பேசப்பட்டு வரும் தமிழ் மொழியின் சங்க கால வடிவமான தமிழி-யை தற்போது, கரூரை சார்ந்த பெண்மணி ஒருவர் கற்று கொடுத்து வருகின்றார்.
கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி தேவி என்ற ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு தமிழி எழுத்துக்களை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதுவரை இவரிடம் 300க்கும் அதிகமான மாணவர்கள் தமிழி எழுத்துக்களை கற்றுள்ளனர். தமிழி எழுத்துக்களை மாணவர்கள் எழுதிப் பழகுவதோடு அதனை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழியை கற்றுக்கொடுக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியை புவனேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
Students are enthusiastic learners of "Tamil" writing!
The following excavations reveal that the Tamil Brahmi dates back to the 6th century. Today, a Karur-based woman has been teaching Tamil, a form of the Tamil language Sangam, which has been spoken by the people for over 2500 years. Bhuvaneswari Devi, a teacher from Karur Periyantangoil area, is teaching Tamil writing to schoolchildren.
span style="font-size: large;">
So far, more than 300 students have learned Tamil writing. Students are interested in writing and learning Tamil script. Bhuvaneswari has called on the school education department to take action to teach Tamil to students of government schools across Tamil Nadu.

No comments:
Post a Comment
Please Comment