பிரதமர் மோடி நிகழ்ச்சி மாணவர்களுக்கு அனுமதி
சென்னை:டில்லியில், பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து, 66 மாணவர்கள் பங்கேற்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, ஜனவரி, 16ல்,டில்லியில் நடக்க உள்ளது.இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில், 66 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என, தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். கட்டுரை போட்டி நடத்தி, வரும், 30ம் தேதிக்குள் மாணவர்களை தேர்வு செய்யுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
The Prime Minister Modi has given permission for the students to attend the Prime Minister Modi address in Delhi.
Prime Minister Modi has arranged an event to encourage students to take a look at the general election. The event is scheduled to take place on January 16 in Delhi. The Center has granted permission for students from different states to participate in the event. According to Tamilnadu School Education Director Kannappan, 66 students can participate in the program. District Primary Education Officers have been ordered to conduct the essay competition and to select students within the next 30th.

No comments:
Post a Comment
Please Comment