வியர்வை அதிகமாக சுரக்க காரணம் என்ன ??
கோடை காலங்களில் அல்லது உடலின் வெப்பம் அதிகரிக்கும் நிலையில் வியர்வைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வியர்வை காரணமாகவே உடல் இதமாகப் பாதுகாக்கப்படுகிறது. தோலிலிருந்து வியர்வை ஆவியாகி மறையும் போது உடலில் குளிர்ச்சியை உணர முடிகிறது.
இது ஒரு இயல்பான தினசரி செயல்பாடு தான். சிலருக்கு மற்றவர்களை விட அதிகப்படியான வியர்வை வெளியேற உடல் வெப்பநிலை அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும், உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள், அடிப்பாதங்கள், உள்ளங்கை மற்றும் நெற்றியில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள காரணத்தால் இங்கு அதிகமாக வியர்வை சுரக்கிறது.
பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வாமை உள்ளிட்ட சில தூண்டல்களால் கூட உடலில் அதிவியர்வை ஏற்படலாம். வெப்பம், வலி, பயம், பதற்றம், உடல் உழைப்பு, குமட்டல், வாந்தி போன்ற காரணங்களால் வியர்வை அதிகரிக்கலாம்.
உழைப்பே இல்லாதவர்களைவிட உழைப்பவருக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவருக்கும் இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகிறது. பலருக்கு எதிர்பாராத தருணங்களிலும் அல்லது எப்போதும் அதிகளவு வியர்த்தல் காரணமாக உடலிலும் மனத்திலும் விவரிக்க இயலாத அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் அதிகமான வியர்வை வெளிப்படும். இதற்கு காற்றோட்டம் இல்லாத சூழல், சமையல் அறை வெப்பம், இறுக்கமான ஆடைகள் போன்றவை கூட காரணமாக இருக்கலாம். ஆனால் எந்தவித காரணமும் இன்றி வியர்வை வருகிறது என்றால் உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.
What causes excessive secretion of sweat ??
The body is protected from sweat that is secreted by sweat glands during the summer or when the body warms up. Sweat evaporates from the skin and causes the body to feel cold.
It's just a normal daily activity. One reason is that body temperature increases for some people to sweat more than others. However, there is a lot of sweating in some parts of the body, especially in the armpits, sweat glands, palms and forehead.
Clinical studies have shown that men sweat more than women. Even some triggers, including allergies, can cause a tremor in the body. Sweating can be caused by heat, pain, fear, tension, physical activity, nausea, and vomiting.
People who work hard and are in good health are twice as likely to sweat than those who are not. Many people have unexplained discomfort in the body and mind due to unexpected moments or always excessive sweating.
Some people are exposed to excessive sweating at night. This may be due to the lack of ventilation, kitchen heat, and tight clothing. But if you are sweating for no reason, you need to consult a doctor immediately.

No comments:
Post a Comment
Please Comment