புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு.

புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு. 


அ ) ஒரு நபர் குழு , 2010 - இன் பரிந்துரைகளின் அடிப்படையிலும் , அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 மற்றும் அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( அதிய பாவு ) துறை , நாள் 22 . 07 . 2013 ஆகியவற்றில் ஆணையிடப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக பணியாளர் சங்கங்கள் / தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஊதிய குறை தீர்க்கும் குழு ஆராய்ந்திடவும் ; 

 ஆ ) அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 , முந்தைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 22 . 07 . 2013 - யை மறு ஆய்வு செய்திடவும் ; 

 இ ) ஊதிய குறை தீர்க்கும் குழுவானது இந்நேர்வில் கருதப்படும் மனுக்கள் / முரண்பாடுகளின் மீது தனது குறிப்பிட்ட பரிந்துரையினை அரசிற்கு வழங்கிடவும் 

 ஈ ) ஊதிய குறை தீர்க்கும் குழுவானது தனது அறிக்கையினை நான்கு மாத காலங்களுக்குள் அரசிற்கு சமர்ப்பிக்கும். 

 அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 மற்றும் ஊதிய குறை தீர்க்கும் குழு , 2013 - ன் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 22 . 07 . 2013 ஆகிய ஆணைகளில் ஊதிய திருத்தம் செய்யப்பட்டதால் பாதிப்புக்குள்ளான தனிப்பட்ட பணியாளர்கள் / பணியாளர் சங்கங்கள் தங்களது முறையீட்டு மனுவினை 03 . 01 . 2020 - க்குள் தலைவர் , 

ஊதிய குறை தீர்க்கும் குழு , 
தரை தளம் , 

அரசு தகவல் தொகுப்பு விவர மைய வளாகம் , 
காந்தி மண்டபம் சாலை , 
கோட்டூர்புரம் , 
சென்னை - 600 025 என்ற முகவரிக்கு தங்களது முழு விலாசத்தினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் . 

 03 . 01 . 2020 - க்கு பிறகு கிடைக்கப்பெறும் மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது . நேரடி கேட்பிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment

Please Comment