இன்றைய செய்திகள் 19/12/2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள் 19/12/2019

இன்றைய செய்திகள் இன்றைய செய்திகள் 19/12/2019


19.12.19(வியாழக்கிழமை)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌹🌹5,8 வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்த பணிகள்.
👉ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்த பணிகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி கீழ்க்கண்ட பணிகள் முடிக்கப்பட்டு தயாராக வைத்திருக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
👉ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தேர்வு மையங்களை அந்தந்த குறுவளமைய தலைமை ஆசிரியருடன் ஒருங்கிணைந்து தேர்வு மையங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
👉ஐந்தாம் வகுப்பில் பத்துக்கு அதிகமாக மாணவர்கள் உள்ள பள்ளிகள் அந்தப் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.
👉10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் அருகில் உள்ள ஒரு கிலோ மீட்டருக்குள் உள்ள பள்ளியுடன் ஒன்றிணைத்து தேர்வு மையம் அமைக்கலாம்.
👉எட்டாம் வகுப்பை பொருத்தவரை மூன்று கிலோமீட்டர்களுக்கு மிகாமல் தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும்.
👉தனியார் பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைக்கலாம்.
👉EMIS ல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விபரங்களும் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

👉EMIS ல் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத இயலாது. தனியார் பள்ளிகளுக்கும் மேற்கண்ட தகவலை தெரிவித்து EMIS ல் உள்ள விவரங்கள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும்
⛑⛑குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், அதுகுறித்த 60 மனுக்களுக்கு பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
⛑⛑சந்திரயான் - 3 திட்ட இயக்குநராக வீர முத்துவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
⛑⛑உலகளவில் அறிவியல் கட்டுரைகளை அதிகளவு வெளியிடுவதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாக அமெரிக்காவில் இருந்தது வெளியான அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⛑⛑பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிர்பயா நிதியை கையாள்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
⛑⛑குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாபெரும் பேரணி நடைபெறும்
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் மு.க.ஸ்டாலின் பேட்டி
⛑⛑குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என பிரதமர் மோடி, அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டனர்- முதல்வர் பழனிசாமி
⛑⛑சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு : பிப்.,15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 30 வரை நடைபெறுகிறது:
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்குகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 20-ஆம் தேதி வரையிலும், 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 30ஆம் தேதி வரையிலும்  நடைபெறுகின்றன.
⛑⛑PINDICS - ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 .2020 ல் விரைந்து முடிப்பதற்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

⛑⛑DSE Proceedings Dated 18.12.2019 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட 1747 ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
இன்று பகல் 2 மணிக்குள் விவரங்களை அளிக்க பள்ளிக் கல்வி இயக்குனர் அவசர உத்தரவு
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கேட்டு சுற்றறிக்கை                                                            ⛑⛑குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்கிறது எதிர்ப்பு.
⛑⛑இதர நிறுவனங்களுக்கான செல்போன் அழைப்பு கட்டணம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
⛑⛑தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டுக்கான தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி 19-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


⛑⛑ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துவோரை கண்ட‌தும் சுட்டுத்தள்‌ளவும். பா‌துகாப்பு படையினருக்கு ரயில்வே இணை ‌அமைச்சர் அறிவுறுத்‌தல்.

⛑⛑தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 6 லட்சம் பேர் அதிகம்.
⛑⛑இந்தியாவின் பொருளாதார சரிவு அதிர்ச்சியாக இருக்கிறது: ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத்
⛑⛑இலவச சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து கொள்ளுமாறு  பள்ளிகளுக்கு உத்தரவு.


⛑⛑9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டம் : மாணவர்களின் பயிற்சிக்காக TNTP இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது: இந்த முன்மாதிரித் தேர்வு இணையதளம் மூலம் 2020 , ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும்;  90 வினாக்கள் கேட்கப்படும்;  90 நிமிடத்தில் விடையளிக்க வேண்டும்.
⛑⛑ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியர், காப்பாளர்கள் உட்பட  1,776 காலிப்பணியிடம் : மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு .
⛑⛑உள்ளாட்சி தேர்தல் - 2019 தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.
⛑⛑ஆசிரியா்களை அடிக்கடி பயிற்சிக்கு அழைக்கக் கூடாது: பள்ளிக் கல்வி ஆணையரிடம் ஆசிரியா்கள் வலியுறுத்தல்
⛑⛑ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு : விவவரங்களுக்கு  www.jipmer.edu.in என்ற இணையத்தளத்தை அணுகலாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment