இன்றைய செய்திகள் 22.12.19 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள் 22.12.19

இன்றைய செய்திகள் 22.12.19(ஞாயிற்றுக்கிழமை)



🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘குடியுரிமையை நிரூபிக்க சொல்லி யாரும் துன்புறுத்தப்படமாட்டார்கள் என உள்துறை அமைச்சகம் விளக்கம். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் என்றும் அழைப்பு
📕📘தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை. போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் உயர்கல்வித்துறை அறிவிப்பு
📕📘சீர்திருத்தங்களை கொண்டுவரும் போது எதிர்ப்புகள் எழுவுவதாக பிரதமர் மோடி கருத்து.மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தல்.

📕📘ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்.
📕📘அனைத்து இந்திய வீரா்களுக்கும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதெமி (என்சிஏ) மூலமே உடல்தகுதி சோதனை நடைபெறும் என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி திட்டவட்டமாக கூறியுள்ளாா்.
📕📘5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை அறிவித்தது தமிழக பள்ளிக் கல்வித்துறை. அதன்படி, ஐந்தாம் வகுப்பு தேர்வு, 15.4.2020-ல் தொடங்கி, 20.4.2020 ல் முடிவடைகிறது. எட்டாம் வகுப்பு தேர்வு, 30.3.20-ல் தொடங்கி, 17.4.20-ல் முடிவடைகிறது.
📕📘சமூகவலைதளங்களில் வெளியான அதே வேதியியல் வினாத்தாள் அரையாண்டுத் தேர்வில் கொடுக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சர்ச்சையில் பள்ளிக் கல்வித்துறை
📕📘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -Rastriya Avishkar Abhiyan (RAA)திட்டத்தின் கீழ், NCERT வழிகாட்டுதல் படி 2019-20 ம் கல்வி ஆண்டிற்கு இணைப்பில் உள்ள அறிவியல் மற்றும் கணித உபகரணங்கள் (Science & Maths Kit)மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்                                                           📕📘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் போதனையை பின்பற்றினாலேயே இந்தியா வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
📕📘7% வட்டியில் இனிமேல் விவசாய நகை கடன் வழங்கக் கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் 11% நகை கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீதம் மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
📕📘TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு. ( நாள் : 19.12.2019 )
📕📘SMC உறுப்பினர்களுக்கு பயிற்சி வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) 24.1.2020ல் நடைபெறும் என மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
📕📘10,11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியானதால் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். - நாளிதழ் செய்தி
📕📘கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறை தினத்தை ஈடுசெய்ய அடுத்தாண்டு ஜனவரி 25- ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
📕📘அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம் ( நாள்:13.12.2019 ) வெளியிடப்பட்டுள்ளது.
📕📘தேசிய தண்ணீர் விருதுகள் 2019 - தகுதியான பள்ளிகள் டிசம்பர் 31க்குள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை
📕📘பணிபுரியும் 900 முதுநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்காததால் நவம்பா் மாதம் ஊதியம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா் - நாளிதழ் செய்தி
📕📘தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வழி நடத்தப்பெறும் பாடங்களுக்குத் திசம்பர் 2019க்கான எழுத்துத் தேர்வுகள் தமிழக உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன .
தேர்வுகள் 21.01.2020 அன்று முதல் துவங்கும் . புதிய தேர்வுகால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்
📕📘ஜனவரி மாதம் 4, 5, 11, 12 தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாகு
அறிவித்துள்ளார்.                                                📕📘மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்கு உதவித்தொகை
- தமிழக அரசு ஆணை
📕📘உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்
காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும்
- மாநில தேர்தல் ஆணையம்
📕📘திரும்ப பெறும் வரை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் காந்திய வழியில் தொடரும்
- அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு
📕📘ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் வரும் 27 மற்றும் 30ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள், ஜன. 3, 4-ம் தேதிகளுக்கு மாற்றம்
- பல்கலை. பதிவாளர்
📕📘2020ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்புக்கான திட்ட அட்டவணை வெளியீடு
ஜனவரியில் குரூப்-1, மே மாதம் குரூப்-2, செப்டம்பரில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது
📕📘தமிழக உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்க  முதன்முறையாக பறக்கும் படை
 மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் பறக்கும் படை ஈடுபடும் என்று அறிவிப்பு
📕📘வினாத்தாள் வெளியான விவகரம். கல்வித்துறை சைபர் கிராமில் புகார்
📕📘உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வாய்ப்பில்லை என உயர்நீதிமன்ற கிளையில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
📕📘உள்ளாட்சித் தேர்தல்கள் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் பணியிலிருந்து விலக்களித்தல்  தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் வெளியீடு
அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் விருப்பமுள்ள மாற்று திறனாளிகளை மட்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறும், விருப்பமில்லாத மாற்றுத் திறனாளிகளை கட்டாயப்படுத்தவேண்டாம் என்றும் இவ்வாணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் திறன், விருப்பு அடிப்படையில் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது                                                       📕📘மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வங்கி ஊழியர்கள் 8-ந்தேதி வேலைநிறுத்தம்
📕📘அறிவியல் நகரம் சார்பில் __எங்கும் அறிவியல் தமிழ் என்ற மாத இதழ் பள்ளிகளுக்கு வழங்குதல் – பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
📕📘தேர்தல் பணி அலுவலர்கள் பணி ஏற்காவிட்டால் துறைரீதியான நடவடிக்கை-திருப்பூர் ஆட்சியர்
📕📘தமிழகத்தில் வரும் 26ம் தேதி நெருப்பு வளைய  சூரிய கிரகணம் நிகழ உள்ளது. (வெறும் கண்களால் பார்க்க கூடாது)
சூரியன், சந்திரன், பூமி  மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை சந்திரன் மறைக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரன் சூரியனை மறைக்கும் காட்சி தென்படும்.
சூரியனை முழுவதுமாக சந்திரன் மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாக டிசம்பர் 26 ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது.
இது பற்றி முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில்;_       டிசம்பர் 26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.00 மணியிலிருந்து 3 மணிநேரம் சூரிய கிரகணம் தெரியும். கோவையில் தெளிவாகவும், சென்னையில் பகுதி அளவிலும் கிரகணம் தெரியும்.
அவினாசி, கரூர், ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட பத்து இடங்களில் கிரகணம் தெளிவாக தெரியும்.
சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்க கூடாது.
கிரகணத்தின் போது உணவு உட்கொள்ளலாம், உணவு கெட்டுப்போகாது என்று கூறினார்.
சூரிய கிரகணத்தை பார்பதற்கு தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்து வருகிறது.

📕📘தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பி.எச்.டி. படிப்பு சேர்க்கை:
விண்ணப்பிக்க ஜன. 4-ஆம் தேதி கடைசி
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) படிப்பில் சேர்க்கை  பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திறந்தநிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழகத்தில் யுஜிசி மற்றும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் முழு நேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலாண்மை படிப்புகள், கல்வி, முதியோா் கல்வி, பொருளாதாரம், தொடா் கல்வி, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், தமிழ், மின்னணு ஊடக கல்வி, புவியியல், வரலாறு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், குற்றவியல் நடைமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளலாம்.
யுஜிசி இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவா்களும் சேர்க்கை  பெற முடியும். முழு நேர ஆராய்ச்சி மாணவா்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை w‌w‌w.‌t‌n‌o‌u.​a​c.‌in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க 2020 ஜனவரி 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment