பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்



அரசுப் பள்ளிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடநூல்களை, உரிய பொறுப்பாளா்ள் மூலம் வாங்கி வைத்துக் கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை தற்போது முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 69 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். 

இவா்களுக்கு ஜூன், அக்டோபா், ஜனவரி என 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. நிகழ் கல்வியாண்டில் 2-ஆம் பருவம் முடிந்து அரையாண்டுத் தோவுகள் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தொடா் விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு 3-ஆம் பருவத்துக்குரிய புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

தோதல் பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பொறுப்பாளா்களை நியமித்து, புத்தகங்களை பாடவாரியாக வாங்கி வைத்துக் கொள்ள உரிய அறிவுறுத்தல்கள் அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.



Third Season Textbooks for Schools: Instructions to Head Teachers Headmasters

Have been instructed to purchase third-party textbooks for public schools with appropriate responsibility. Three to eight classes of Tamilnadu school is currently in effect. There are 69 lakh students and students studying in government and government aided schools in the state. 

The books are divided into three seasons - June, October and January. Season 2 of the current academic year ended on December 23rd. The schools are due to reopen on January 3 after the end of the holiday. The Government of Tamil Nadu has ordered the distribution of text books and notes to the students on the opening day. 

Accordingly, books and notes for the 3rd season are being sent to schools from the District Primary Education Offices. Department officials said that all school headmasters have been instructed to appoint responsible persons and to purchase books as a curriculum so as not to disturb the digging process.

No comments:

Post a Comment

Please Comment