CBSE 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 29-ம் தேதி வரை தொழிற்கல்வி சார்ந்த பாடங்களுக்கான பொதுத் தேர்வு நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, இயற்பியல், கணிதம், கணக்கு பதிவியல், வேதியியல், தாவரவியல் ஆகிய முக்கிய பாடங்களுக்கான தேர்வு 30-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகளின்போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும்.10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல்| 1.30 மணி வரை நடக்கும்.
அதேபோல், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப் படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
CBSE releases Public Examination Schedule for Grades 10 and 12
The Public Examination Schedule for Class 10 and 12 students studying under the CBSE syllabus was released yesterday. Accordingly, the general exam for 12th grade students will be held from 15th February till 30th March. General exams for vocational subjects will be held from February 15 to February 29.
Subsequently, the selection of major subjects in Physics, Mathematics, Accounting, Chemistry and Botany will be held till 30th. Question papers will be issued at 10 am, the question paper will be issued at 10.15 am and the exams will commence at 10.30 am. Will be held until 1.30 p.m.
Similarly, the general exam for CBSE 10th grade students will be held from February 15th to March 20th. Answer sheets will be issued at 10 am. The question paper will be issued at 10.15 am and the exams will begin at 10.30 am and will continue till 1.30 pm. CBSE sources said the exam results will be released in the first week of May.

No comments:
Post a Comment
Please Comment