NMMS தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

NMMS தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

NMMS தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து 



மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வை 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். மத்திய அரசின் தேசிய வரு வாய்வழித் மற்றும் திறன் படிப்பு தவித் தொகைத் திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உத வித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப் படும். இதில் தேர்ச்சி பெறுபவர் களுக்கு 9 முதல் பிளஸ் 2 முடிக் கும் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக வழங் கப்பட்டு வந்தது. 

தற்போது நடப்பு கல்வியாண்டு முதல் உதவித் தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக் கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை காரணமாக தேர்வு டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

திட்டமிட்டபடி என்எம்எம்எஸ் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 534 தேர்வு மையங் களில் 1.50 லட்சம் மாணவ, மாண விகள் எழுதினர். காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், அதன்பின் 11.30 முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெற்றது. இதில் மனத்திறன் தேர்வு கடினமாக வும் இருந்ததாக மாணவர்கள் தெரி வித்தனர். தொடர்ந்து தேர்வு முடிவு கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1.5 lakh students participated in the NMMS Examination Under the Central Government's National Vocational and Skills Education Scheme, scholarships for students studying in 8th grade in government schools are provided. 

Students will be given NMS exams for this purpose. The recipients will be given a monthly stipend of Rs.500 to Rs.9 to Rs.2 per month. The Government of Tamil Nadu has announced that the subsidy will be increased to Rs 1,000 from the current academic year. In this backdrop, it has been announced that this year's NMMS exams will be held on December 1. But due to heavy rain, the selection was postponed to December 15. The NMMS exams were held yesterday as planned. 

Over 1.50 lakh students and students wrote the exam in 534 exam centers across Tamil Nadu. The exam was held from 9.30 am to 11 pm followed by the Graduation Skills from 11.30 am to 1 pm. The students said that it was difficult to choose the mindset. Select officials said that the results of the follow-up will be released next month.

No comments:

Post a Comment

Please Comment