தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் NEET தேர்வுக்கான தகவல் தொகுப்பு வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் NEET தேர்வுக்கான தகவல் தொகுப்பு வெளியீடு

தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் NEET தேர்வுக்கான தகவல் தொகுப்பு வெளியீடு

நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு முதல் முறையாக தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப் புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு களுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. 

 தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் கடந்த கடந்த 2-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் என்பதால் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு ஆர்வ மாக விண்ணப்பித்து வருகின்றனர். மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்த நீட் தேர்வை கடந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 


நீட் தேர்வு குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய தகவல் தொகுப்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இணையதளத்தில் வெளி யிடப்பட்டு வந்தது. இந்நிலையில், அனைத்து மாநில மாணவ, மாணவிகள் விண் ணப்பிக்க வசதியாக தகவல் தொகுப்பு நீட் தேர்வு நடை பெறும் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 10 மொழிகளில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெறும் தெலுங்கு மொழியில் மட்டும் தகவல் தொகுப்பை தேசிய தேர்வு முகமை வெளியிடவில்லை.

Release of NEET Exam Information Package in 10 languages ​​including Tamil

The information package for NEET Examination has been published for the first time in 10 languages ​​including Tamil. The NEET exam for the 2020-21 academic year for MBBS, BDS courses and Siddha, Ayurveda, Unani and Omopathy courses will be held on May 3 at all government and private medical colleges across the country.

 Applying for the selection online, which is conducted by the National Selection Agency, started on 2nd November at www.nta.ac.in/www.ntaneet.nic.in. Since the 31st is the last day to apply, students and students from all over the country including Tamil Nadu are applying for NEET. The National Selection Agency has been conducting the NEET examination conducted by the Central Secondary Education Board (CBSE) since last year.

All information about NEET Exam was released on the website in English and Hindi only. In this context, all state students and students will be able to find a comprehensive information package in NEET, Tamil, English, Hindi, Kannada, Gujarati, Marathi, Odia, Assamese, Bengali and Urdu. The National Select Agency does not publish information on the Telugu language in which the NEET exam is held.

No comments:

Post a Comment

Please Comment