கல்விச் செய்திகள் 04•01•2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்விச் செய்திகள் 04•01•2020

கல்விச் செய்திகள்   04•01•2020


🔥
🛡அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று  திறக்கப்பட இருந்த அரசு & உதவி பெறும் பள்ளிகள் 6 ஆம்  தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

🔥
🛡TRB - கணினி பயிற்றுநர் நிலை I ( முதுகலை ஆசிரியர் நிலை ) தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு ஜனவரி 8 & 9 தேதிகளில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் : தகுதியானவர் பெயர் பட்டியலை இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

🔥
🛡PG TRB - திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் & தற்காலிக தேர்ந்தெடுக்கப் பட்டோர் பட்டியல் வெளியீடு.

🔥
🛡ஜனவரி 8ஆம் தேதி தேசிய அளவிலான வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், ஜன.8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

🔥
🛡சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன . 10 - ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு . மாநில அரசு அலுவலகங்கள் , கல்வி நிலையங்கள் அன்று செயல்படாது

🔥
🛡ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 6 ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். ஜன.,6 ம் தேதிக்கு பதிலாக ஜன.,25 வேலை நாளாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவற் தெரிவித்துள்ளார்.

🔥
🛡முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜன.6-ல் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 6-ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். ஜன. 6-ம் தேதிக்கு பதில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜன. 25-ல் செயல்படும்  எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

🔥
🛡தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு (ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் மட்டும்)
பெங்களூருவில் அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்வது தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவு

🔥
🛡6,029 அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் : ஆசிரியா்களுக்கு ஜனவரி 6-இல் பயிற்சி தொடக்கம் 

No comments:

Post a Comment

Please Comment