வரலாற்றில் இன்று 09/01/2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 09/01/2020

*🔵நாடும் ⚖ நடப்பும்*

*🇵🇾 வரலாற்றில் இன்று 🇵🇾*


            _*🌹வியாழன் 🌹*_

*✍பதிவு நாள்: 09-01-2020*

*கிரிகோரியன் ஆண்டின் ஒன்பதாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்* 

🖌475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

🖌1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார்.

🖌1349 – கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

🖌1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

🖌1707 – இசுக்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துப் பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

🖌1760 – அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர்.

🖌1788 – கனெடிகட் அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது.

🖌1792 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

🖌1799 – பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியப் போர்களுக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

🖌1816 – ஹம்பிரி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

🖌1822 – போர்த்துக்கீச மன்னர் ஆறாம் யோவானின் கட்டளைக்கு மாறாக போர்த்துக்கீச இளவரசர் முதலாம் பெத்ரோ பிரேசிலில் தங்கியிருக்க முடிவு செய்தார். பிரேசில் விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

🖌1857 – கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.

🖌1858 – டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

🖌1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.

🖌1878 – இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினார்.

🖌1905 – உருசியத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றன. (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 உருசியப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.

🖌1909 – தென் முனைக்கு சென்ற எர்னஸ்டு சாக்கில்டன் தலைமையிலான குழு தென் முனையில் இருந்து 97 கடல் மைல் தொலைவில் பிரித்தானியக் கொடியை நாட்டியது.

🖌1915 – மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த இந்நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

🖌1916 – முதலாம் உலகப் போர்: உதுமானியர்களின் வெற்றியுடன் கலிப்பொலி போர்த்தொடர் முடிவுக்கு வந்தது.

🖌1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

🖌1927 – கனடா, மொண்ட்ரியால் நகரில் நாடக அரங்கு ஒன்றில் தீ பரவியதில் 78 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

🖌1951 – ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

🖌1957 – சூயசு கால்வாயை எகிப்திடம் இருந்து மீலப்பெறத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் சர் அந்தோனி ஏடென் பதவி துறந்தார்.

🖌1964 – மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

🖌1972 – ஆங்காங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.

🖌1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

🖌1990 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

🖌1991 – ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பு குறித்து சுமுகமான தீர்வு காண்பதற்காக அமெரிக்க, ஈராக்கியப் பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.

🖌1991 – லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியஸ் நகரை முற்றுகையிட்டது.

🖌1992 – யுகோசுலாவியாவில் சிறுப்ஸ்கா குடியரசு என்ற புதிய குடியரசு நிறுவப்பட்டது.

🖌1992 – முதற்தடவையாக சூரியமண்டல புறவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

🖌2001 – சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

🖌2004 – சட்டவிரோத அல்பேனியக் குடியேறிகளை இத்தாலிக்குஏற்றிச் சென்ற படகு ஒன்று கரபுருன் குடாவில் மூழ்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

🖌2005 – பலத்தீன தேசிய ஆணையத்தின் தலைவராக மகுமுது அப்பாசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🖌2005 – சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.

🖌2007 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.

🖌2011 – ஈரான் விமானம் ஒன்று ஊர்மியா நகருக்கருகில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

*🔵பிறப்புகள்* 

🖌1554 – பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1623)

🖌1843 – நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (இ. 1914)

🖌1868 – சோரென்சென், தென்மார்க்கு வேதியியலாளர் (இ. 1939)

🖌1879 – ஜான் பி வாட்சன், அமெரிக்க மருத்துவர் (இ. 1958)

🖌1902 – ஓசேமரிய எஸ்கிரிவா, எசுப்பானிய மதகுரு, புனிதர் (இ. 1975)

🖌1908 – சிமோன் த பொவார், பிரான்சிய மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1986)

🖌1913 – ரிச்சர்ட் நிக்சன், அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவர் (இ. 1994)

🖌1917 – டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1990)

🖌1922 – ஹர் கோவிந்த் கொரானா, நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க உயிரிவேதியியலாளர் (இ. 2011)

🖌1927 – சுந்தர்லால் பகுகுணா, இந்திய சூழலியலாளர்

🖌1927 – துரைசாமி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (இ. 1971)

🖌1928 – பாலக்காடு ஆர். ரகு, தென்னிந்திய மிருதங்க கலைஞர் (இ. 2009)

🖌1933 – குறமகள், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016)

🖌1933 – வில்பர் ஸ்மித், சாம்பிய-ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர்

🖌1934 – மகேந்திர கபூர், இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2008)

🖌1951 – ஒய். ஜி. மகேந்திரன், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர்

🖌1952 – கெளசிக் பாசு, இந்தியப் பொருளியலாளர்

🖌1959 – இரிகொபெர்த்தா மெஞ்சூ, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குவாத்தமாலா செயற்பாட்டாளர்

🖌1976 – ராகவா லாரன்ஸ், இந்திய நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர்

🖌1980 – நிதின் சத்யா, தமிழ்த் திரைப்பட நடிகர்

🖌1982 – கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி

🖌1989 – நீனா டோப்ரேவ், பல்கேரிய-கனடிய நடிகை

*🔵இறப்புகள்* 

🖌1848 – கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1750)

🖌1873 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன் (பி. 1808)

🖌1924 – பொன்னம்பலம் அருணாசலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1853)

🖌1961 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1867)

🖌1979 – கு. கோதண்டபாணி, தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1896)

🖌1992 – பில் நாக்டன், ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1910)

🖌2004 – நிசீம் எசெக்கியேல், இந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1924)

🖌2013 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1919)

🖌2013 – ரிசானா நபீக், சவூதி அரேபியாவில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் (பி. 1988)

🖌2014 – தாலே தோமஸ் மார்டென்சென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1939)

*🔵சிறப்பு தினம்* 

🖌தியாகிகள் தினம் (பனாமா)

🖌வெளிநாடுவாழ் இந்தியர் தினம்

🖌அமைதி உடன்பாடு தினம் (தெற்கு சூடான்)

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment