*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மார்கழி 24 ♝ &* *09•01•2020*
🔥
🛡பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை நாளைக்குள்
அனுப்ப கல்வித்துறை காலக்கெடு விதித்துள்ளது.
🔥
🛡EMIS இணையதளத்தில் போலியாக மாணவர்களை பதிவு செய்ய இயலாத வகையில் புதிய கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின் மூலம் தனியா பள்ளிகளில் 4,85,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுத்தால் அரசுப்பள்ளிகளில் 3,000 பணியிடங்கள் பறிபோகும் அபாயம்- பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்- அரசு பள்ளிகளை நசுக்கும் கல்வித்துறை - நாளிதழ் செய்தி
🔥
🛡மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் தேசிய கட்டுரைப் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'நமது தேசிய சுதந்திரப் போராட்டத்தை ஊக்கப்படுத்திய உன்னதமான கொள்கைகளை மதிப்பதும், பின்பற்றுவதும் ' என்பதே இந்தப் போட்டிக்கான தலைப்பு . உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ - மாணவியரும் இதில் கலந்துகொள்ளலாம் . விண்ணப்பதாரர்கள் kartavya . ugc . ac . in என்ற இணையதளமுகவரியில் விண்ணப்பிக்கலாம். கட்டுரையை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம்.
🔥
🛡பள்ளிக் கல்வித்துறையில், பணியின்போது இறந்த, 43 பேரின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது
🔥
🛡பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,12 வகுப்பு மாணவர்கள் எளிதாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம்வினாவங்கி புத்தகம் வழங்கப்படும். இந்த ஆண்டு இன்னும் வழங்கப்படவில்லை. மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு - நாளிதழ் செய்தி
🔥
🛡10வது கல்விஆண்டு தொடங்கவுள்ள நிலையில் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழகஅரசை தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.
🔥
🛡 பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவிப்பு
🔥
🛡மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு , பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி , 03 . 02 . 2020 முதல் 13 . 02 . 2020 வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என கல்வித்துறை உத்தரவு
🔥
🛡பள்ளிக்கல்வி மற்றும் காவல் துறைக்கு ரூ.132 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:
Post a Comment
Please Comment