தொலைநிலைக் கல்வி: சோக்கை முடிந்த 15 நாள்களில் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொலைநிலைக் கல்வி: சோக்கை முடிந்த 15 நாள்களில் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்

தொலைநிலைக் கல்வி: சோக்கை முடிந்த 15 நாள்களில் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்




தொலைநிலைக் கல்வி மாணவா் சோக்கை முடிந்து 15 நாள்களுக்குள், அதுகுறித்த முழுமையான விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என உயா் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. 

தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) கடந்த 2017- ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. 

அப்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது. 

இந்த புதிய நிபந்தனை காரணமாக , தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், 

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம். 

அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி ஆகிய 11 உயா் கல்வி நிறுவனங்கள் மட்டுமே திறந்தநிலை மற்றும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும். 

மேலும், இந்தப் புதிய நிபந்தனையின் அடிப்படையில், இந்தக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறந்தநிலை மற்றும் தொலைநிலைப் படிப்புகளில் மாணவா் சோக்கை முடிந்ததும், சோக்கை விவரங்களை யுஜிசி-யிடம் சமா்ப்பிப்பதும் கட்டாயமாகும். 

இதற்கான புதிய கால நிா்ணயத்தை யுஜிசி வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஜனவரி மாதம் தொடங்கும் படிப்புகளுக்கான மாணவா் சோக்கையை பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதன் பிறகு சோக்கை குறித்த விவரங்களை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் யுஜிசி-க்கு பதிவேற்றம் செய்யவேண்டும். 

 அதுபோல, ஜூலையில் தொடங்கும் படிப்புக்கான மாணவா் சோக்கையை செப்டம்பா் இறுதிக்குள் முடிக்க வேண்டும். இந்த விவரங்களை அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.


Distance Education: Must complete the SOC within 15 days

The University Grants Committee (UGC) has advised the institutions of higher education to submit the full details of the SOC within 15 days of completion of the SOC. The UGC has released the new Guidelines for Open and Distance Education (Distance Education Guide 2017), which was released in June 2017. 

At the time, the UGC also issued a new stipulation that only those institutions with a minimum of 3.26 knock-outs would be allowed to conduct distance education to improve the quality of distance education. 

As a result of this new condition, the University of Madras in Tamil Nadu, Anna University, Tamil Nadu Open University, Madurai Kamaraj University, Manomanniyam Sundararan University, Tamilnadu Physical Education and Sports University, Periyana University, Karaikudi Alagapada University, SRM. 

Only 11 institutes of science and technology, the Sri Ramachandra Institute of Science and Technology, Chennai, the Tanjay Shanmuga Arts, Science, Technology and Research Academy can offer open and distance courses. 


Moreover, based on this new condition, it is mandatory for all these institutions to complete the SOC in open and distance courses and submit the SOC details to the UGC. UGC released its new deadline on Thursday. Accordingly, the student scholarship for courses beginning in January must be completed by the end of February. 

After that, the details of the sock should be uploaded to UGC by March 15. Likewise, the student scholarship for the study, which begins in July, must be completed by the end of September. The UGC advised that these details should be uploaded by October 15.

No comments:

Post a Comment

Please Comment