மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது 'காலைக்கதிர்': பிப்., 2ல் சேலத்தில் 'நீட்' தேர்வு கருத்தரங்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது 'காலைக்கதிர்': பிப்., 2ல் சேலத்தில் 'நீட்' தேர்வு கருத்தரங்கம்

மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது 'காலைக்கதிர்': பிப்., 2ல் சேலத்தில் 'நீட்' தேர்வு கருத்தரங்கம்




சேலம்: 'காலைக்கதிர்' சார்பில், 'நீட்' தேர்வு கருத்தரங்கம், பிப்., 2ல் சேலத்தில் நடக்கிறது.மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை முதன்மையாக கொண்டு, 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கலாம். இத்தேர்வில் போட்டியிட்டு, மருத்துவ கனவை நனவாக்கிக்கொள்ள, பாடங்களில் புரிதல் மட்டுமே போதாது. 

பதற்றமின்றி விடையளிப்பது, தேர்வை அணுகும் முறை, அதில் ஏற்படும் பிழைகளை தவிர்ப்பது உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கும். மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் முயற்சியில், 

'காலைக்கதிர்' நாளிதழ் மற்றும் சேலம், 'டைம்' கல்வி நிறுவனம், சேலம், ஜெய்ராம் பப்ளிக் பள்ளி இணைந்து, 'நீட்' தேர்வுக்கான கருத்தரங்கம் மற்றும் மாதிரித்தேர்வை நடத்துகின்றன.

பிப்., 2 காலை, 9:30 மணி முதல், 12:00 மணி வரை, கருத்தரங்கம், 12:00 மணி முதல், 1:00 மணிவரை, மாதிரி தேர்வு, சேலம் சின்னதிருப்பதி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் நடக்கிறது. 

இதில், விண்ணப்பிப்பது முதல், அட்மிஷன் வரையிலான நடைமுறை, மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு, அனுபவமிக்க நிபுணர்களால் வழங்கப்பட உள்ளன. 

பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களும் பங்கேற்கலாம். அதே போல், 'நீட்' தேர்வு அடிப்படையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, மாதிரித்தேர்வு நடத்தப்படும். 

ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் பதில் அளிக்கும் அனுபவம், விடைத்தாளை உடனடியாக மதிப்பீடு செய்து, திரும்ப மாணவர்களுக்கு அளித்து, சுய பரிசோதனைக்கான வாய்ப்பு ஆகியவையும் வழங்கப்பட உள்ளன. 

உங்கள் குழந்தைகளின் விருப்பத்தையும், திறமையையும் அறிந்து சரியான பிரிவை (குரூப்) பிளஸ் ?ல் தேர்ந்தெடுக்கவும், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள வாய்ப்புகள் பற்றியும், 

சேலம் டைம் கல்வி நிறுவன இயக்குனர் பெரியசாமி ஆலோசனை வழங்குகிறார்.பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு மாணவர்களும், பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். அனுமதி இலவசம்.


'Morning Ridge': Guidelines for Students: 'Need' Exam Seminar in Salem, Feb. 2

Salem: The 'Need for Selection' seminar is being held in Salem on Feb. 2, for the 'Needle' seminar. conducted. Students who have passed the Plus Two exam with a pass percentage of 50% in Physics, Chemistry and Biology. 

To compete in this exam and make the medical dream come true, understanding the subjects is not enough. An impulsive response, including access to the selection and avoiding errors, will play a key role. In an effort to make students realize their medical dreams, 'Morning Rid' and Salem, 

'Time' Institute of Education, Salem, Jairam Public School, are conducting seminars and selections for 'Need'. Feb. 2, 9:30 am to 12:00 pm, Seminar, 12:00 pm to 1:00 pm Sample selection, taking place at Salem Chinnathirupathi, Jairam Public School. 

From the application to the admission process, students' doubts are addressed by experienced professionals. Apart from Plus 2 students, Class 10 students can also participate. Similarly, based on the 'Need' selection, the questionnaire will be prepared and selected. 



The OMR will have the opportunity to answer the question, answer the questions promptly, give back to the students, and have the opportunity for self-examination. 

Salem TIME Institute Director Periyasamy advises you to select the right group (group) plus the opportunities in your children to learn about your children's wishes and skills. Permission is free.

No comments:

Post a Comment

Please Comment