டான்செட்: விண்ணப்பிக்க ஜன.31 கடைசி
முதுநிலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சோக்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொதுநுழைவுத் தோவுக்கு (டான்செட்- 2020) விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும்.
எம்.இ., எம்.ஆா்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளிலும், பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளிலும் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடத்தப்படுகிறது.
இந்தத் தோவை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோவு பிப்ரவரி 29, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் இந்தத் தோவு நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும், இரண்டாம் நாளில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் தோவு நடைபெற உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆன்-லைனில் பதிவு செய்ய ஜனவரி 31 கடைசி தேதியாகும்.
மேலும் விவரங்களுக்கு அல்லது 044 - 22358314 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Tancet: Apply Jan. 31
Last Year in Engineering and MBA, MCA. January 31 is the last date for applying for the Tamil Nadu Public Workshops (DONSET-2020) to get the SOC in courses. MBA and MCA programs are offered in Masters of Engineering, Arts and Sciences, etc.
The student sock is also conducted on the basis of the docket score. The excavation is conducted by Anna University. The excavation will be held on February 29 and March 1 for the 2020 Dawnset Excavation.
On the first day, the MBA and MCA will take part. The courses and the second day of postgraduate engineering courses are scheduled. The on-line application process began on Tuesday.
January 31 is the last date to register on-line. For more details or to contact the Anna University, telephone number 044 - 22358314

No comments:
Post a Comment
Please Comment