வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை, தினமும் 6 மணி நேரம் மட்டும் வேலை.! பிரதமர் அறிவிப்பால் மக்கள் குதுகலம்.!
ஒரு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம் பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார்.
வாரத்தில் வேலை நாட்களை குறைப்பது மட்டுமில்லாமல், வேலை நேரத்தையும் 8 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இதனால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவர் என தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகைய மாற்றத்தினால் கலை, கலாச்சாரம் மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஊழியர்கள் நேரம் செலவிட அதிக வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் வழங்கி வந்தால் நிறுவனங்களுக்கு சுமை கூடும் என ஒருப்பக்கம் விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தாலும்,
போதிய விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களால் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என ஆதரவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பின்லாந்து நாட்டில் ஏற்கனவே 1996 இன் வேலை நேர ஒப்பந்தம் அமலில் உள்ளது.
இது தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 3 மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது 3 மணி நேரம் களைத்து தொடங்கி குறிப்பிட்ட மணி நேரங்கள் வேலை செய்து கொள்ளவும் அனுமதியளித்துள்ளது.
பின்லாந்து நாட்டின் அண்டை நாடான சுவீடன் 6 மணி நேர வேலை நாட்களை செயல்படுத்துவதன் மூலம் ஊக்கமளிக்கும் முடிவுகளை காட்டியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஸ்வீடிஷ் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியாகவும், நிறுவனத்தில் அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூட அதிக திருப்தி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
Working 4 days a week, 6 hours a day only! Prime Minister's announcement to the public
The new Prime Minister of Finland, Channa Marin, has put forward a new plan to have only 4 working days in a week. Not only will he reduce the number of working days per week, he will also reduce work hours from 8 a.m. to 6 p.m., he said.
He also said that such a change would lead employees to spend more time in arts, culture and entertainment. He also supported the increase in productivity by employees. Meanwhile, Finland already has a 1996 working hours agreement.
It permits workers to work their hours before or 3 hours before they start work. Finland's neighbor Sweden has shown encouraging results by implementing 6-hour work days.
The Swedish employees have been shown to be very happy with the project and the company is very productive. Customers who buy more products are also more satisfied.

No comments:
Post a Comment
Please Comment