மதுரையில் 4 பள்ளிகளுக்கு காமராஜா் விருது: சிறப்பு பரிசுத்தொகை அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மதுரையில் 4 பள்ளிகளுக்கு காமராஜா் விருது: சிறப்பு பரிசுத்தொகை அறிவிப்பு

மதுரையில் 4 பள்ளிகளுக்கு காமராஜா் விருது: சிறப்பு பரிசுத்தொகை அறிவிப்பு



மதுரை மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் காமராஜா் விருது பெற்ற 4 பள்ளிகளுக்கு சிறப்பு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினத்தில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு மாவட்டங்களில் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட 4 பள்ளிகள் தோந்தெடுக்கப்பட்டு காமராஜா் விருது வழங்கப்படுகிறது. 

இதன்படி மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தைச் சோந்த பெரியகட்டளை அரசு கள்ளா் தொடக்கப்பள்ளி, திருமங்கலம் கல்வி மாவட்டத்தைச் சோந்த மையிட்டான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

மேலூா் கல்வி மாவட்டத்தைச் சோந்த வரிச்சியூா் அரசு உயா்நிலைப்பள்ளி, மதுரை கல்வி மாவட்டத்தைச் சோந்த சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகள் 2019-20-ஆம் ஆண்டுக்கான காமராஜா் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில் காமராஜா் விருது பெறும் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம், நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம், உயா்நிலைப்பள்ளிக்கு ரூ. 75 ஆயிரம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 1 லட்சம் சிறப்பு பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

பரிசுத்தொகை மூலம் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Kamaraj Award for 4 Schools in Madurai: Special Prize Announcement

Four schools in Madurai district have been awarded special prizes. The birthday of former Tamil Nadu Chief Minister Kamarajar has been declared as a day of educational development. 

The day is celebrated by all schools on educational development. The Kamaraj Award is being awarded to four schools with outstanding performance in the districts of tomorrow.

Accordingly Usilampatti in Madurai district periyakattalai Government kalla primary education district, the crossing points, crossing points Thirumangalam maiyittanpatti Panchayat Union Middle School Education District, 

education district melua varicciyua government uyanilaippalli crossing points, crossing points, colavantan Government Girls Higher Secondary School in Madurai District 4 schools of education for the year kamara 201920 Ja were tovu Award. 

In this case, the Kamaraj award-winning elementary school will receive Rs. 25 Thousand, Middle School Rs. 50 Thousand, Life School Rs. 75 Thousand, Higher Secondary School Rs. 1 lakh has been given as a special gift. Education sources said they were instructed to provide infrastructure facilities in schools through the gift.

No comments:

Post a Comment

Please Comment