தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர்த்து
குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தி பணி ஆணை
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்
குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுவரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.
இந்நிலையில், முறைகேடு காரணமாக குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. இதனால், நியாயமான முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கத்தில் இருந்தனர்.
இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ‘‘ஒருசிலர் செய்த தவறுக்காக நேர்மையாக தேர்வு எழுதிய மற்றவர்களை தண்டிப்பது சரியல்ல. அதனால், குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது’’ என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித் துள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், “குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர் களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த தேர்வும் ரத்து கிடையாது. குரூப்-4 தேர்வின் அடுத்தகட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 9,300 காலிப் பணியிடங்கள் தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு முறையாக ஒதுக்கப்படும். இதனால், தேர்வு எழுதியவர்கள் கவலைப்பட வேண்டாம்’’ என தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை கேடு விவகாரம், அந்த ஆணை யத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது. இதனால், தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள், தேர்வுக் குழுவினர் உட்பட அனைவரும் இடமாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
TNPSC Officers To Receive Group-4 Examination Excludes Those Engaging in Examination Abuse
Those who have passed the Group-4 exam will soon be consulted and given an appointment order, TNPSC officials said. CBCID police are conducting an intensive investigation into the alleged abuse of the Group-4 exam. Rameshwaram and Kilakkarai have been found to have abused 99 people.
Then they were ordered by TNPSC to impose a lifetime ban. In the meantime, there have been rumors that the Group-4 exam is to be canceled due to irregularities. Thus, the candidates who wrote the exams reasonably well were mixed. When asked about this, Minister Jayakumar said that it was not right to punish others who honestly chose to blame for some of their mistakes. Therefore, the Group-4 selection will not be canceled.
Explaining this, TNPSC officials said, “Other than those involved in the Group-4 selection scandal, they will soon be consulted and given employment orders. Only those who have abused the Group-4 exam have been disqualified.
The entire selection is not canceled. The subsequent disclosure of the Group-4 exam is not true. The 9,300 vacancies already announced will be formally reserved for those who have written the exam. Thus, the authors of the selection are worried about the telephone. The TNPSC selection process has been challenged, and the credibility of the decree has been questioned. Thus, it is said that all who are currently TNPSC administrators, including the selection committee, can be transferred.


No comments:
Post a Comment
Please Comment