பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது. 

வணிகவியல் துறையில் பி.காம் படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.  

நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார வாரியம் 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 500 

பணி : இளநிலை உதவியாளர் (கணக்கு) 

கல்வித் தகுதி : வணிகவியல் துறையில் பி.காம் முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : TANGEDCO Recruitment 2020 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 

தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வுக் கட்டணம் : பி.சி., எம்.பி.சி., பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

No comments:

Post a Comment

Please Comment