இன்றைய செய்திகள் 7.01.2020(செவ்வாய்க்கிழமை) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள் 7.01.2020(செவ்வாய்க்கிழமை)

இன்றைய செய்திகள்7.01.2020(செவ்வாய்க்கிழமை)



🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📚📚சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம்:
சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து வழங்கப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை  தலைமைச் செயலக அரசு துணைச் செயலாளர் கடிதம்*
பல ஆண்டுகளாக பலர் ஏற்படுத்திய குழப்பத்திற்கு தெளிவான தெளிவுரைக் கடிதம் வெளியீடு
📚📚அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமிக்க முடியாது.                                         📚📚இரண்டாம் பருவத்துக்குரிய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று புத்தக வங்கியில் பாதுகாத்து வையுங்கள் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
📚📚டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல்.
-தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.
📚📚டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் மூலம் பணியிழந்த 491 பேருக்கு வாணிப கழகத்தில் இளநிலை உதவியாளர் பணி - முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார்
📚📚தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது"
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும்
9ம் தேதி இரண்டாவது துணை நிலை அறிக்கை, முதலமைச்சர் பதிலுரை நடைபெறும்
- சபாநாயகர்
📚📚ஒன்றிய, மாவட்ட ஊராட்சித் தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய தடை கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு
📚📚உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி பதிவை தாக்கல் செய்ய ஆணை. தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்.
📚📚குரூப் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
👉அனைத்து ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
👉தவறு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை.
👉உண்மை தெரிய வரும் வரை தேர்வர்கள் பொறுமை காக்க வேண்டும்.
👉டி.என்.பி.எஸ்.சி.யின் நேர்மையான செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை
👉ஒரே மையத்தில் தேர்வு எழுதிய நிறைய பேர் தேர்வாகி உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை
-டி.என்.பிஎஸ்.சி
📚📚குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விசாரணை
வெளிமாவட்ட தேர்வர்கள் எத்தனை பேர் ராமநாதபுரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்து ஆய்வு
வெற்றி பெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சரிபார்ப்பு
- டிஎன்பிஎஸ்சி
📚📚2017-18ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு
குரூப் 2ஏ தரவரிசையின் முதல் 50 இடங்களில் 30 பேர் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வெழுதியவர்கள் என தகவல்
📚📚 அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்(PONGAL BONUS ) அறிவிப்பு.
👉பொங்கல் கருணைத்தொகை C & D பிரிவு ஊழியர்களுக்கு ரூபாய் 3000 வழங்க தமிழக அரசு ஆணை
👉Grade Pay 4300-ம் அதற்கும் கீழ் உள்ளவர்கள் C & D employees. 5200-ம் அதற்கும் மேல் உள்ளவர்கள் B & A employees ஆவர். CD பிரிவினர்க்கு  ரூ 3000 போனஸ் உண்டு.
📚📚சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி 9 ஆம் நாளன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
📚📚ரத்ததானம் அளிக்கும் அரசு ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் -  மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் அறிவிப்பு : ஆண்டொன்றுக்கு 4 முறை அத்தகைய விடுப்பு வழங்கப்படும்; அதற்கு உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
📚📚பத்தாம் வகுப்பு - கணித, அறிவியல் பாடத்தின் வினாத்தாள் முறையில் மாற்றம் செய்து அகமதிப்பீடு வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.
📚📚அரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை என்பது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சார்ந்த வழக்கொன்றில் கருத்து தெரிவித்துள்ளது.
📚📚கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் ( ராமேஸ்வரம்,  கீழக்கரை)  தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதன் செயலர் நந்தகுமார் அவர்கள் விசாரணை மேற்கொள்ளப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment