பட்டதாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை ! குடியரசு தினத்திற்குள் விண்ணப்பியுங்கள் ! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பட்டதாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை ! குடியரசு தினத்திற்குள் விண்ணப்பியுங்கள் !

பட்டதாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை ! குடியரசு தினத்திற்குள் விண்ணப்பியுங்கள் !


பாரத ஸ்டேட் வங்கியில், காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் 8,000 காலியாக உள்ளது. 

அந்த பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 393 இடங்கள் காலியாக உள்ளது. 

ஜனவரி 1, 2020 தேதியின்படி வயது வரம்பு 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு உள்ள பிரிவினருக்கு அரசு விதிகள்படி வயது வரம்பு சலுகைகள் உண்டு.மாத ஊதியமாக 13,075 ரூபாயில் இருந்து 31,450 ரூபாய் வரை வழங்கப்படும். 

இந்தப் பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : General, OBC, EWS பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 750 ரூபாய் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020. படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுங்க.

No comments:

Post a Comment

Please Comment