இன்றைய செய்திகள் 8.01.2020(புதன்கிழமை) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள் 8.01.2020(புதன்கிழமை)

இன்றைய செய்திகள் 8.01.2020(புதன்கிழமை)



🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 25 ஊராட்சி பதவிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும்          - மாநில தேர்தல் ஆணையம்
🍒🍒இன்று வேலைநிறுத்த போராட்டம் நடக்கவிருக்கும் நிலையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்
-பள்ளிகல்வித்துறை
🍒🍒நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும், ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு
🍒🍒பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த‌தை தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் உள்ள வேகத்தடைகளை அகற்ற உத்தரவு
நெரிசல் இல்லாத வாகன இயக்கத்தை உறுதி செய்ய போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை
🍒🍒பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை  ஜனவரி10க்குள் அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு
🍒🍒பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
🍒🍒பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
🍒🍒முன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆசிரியர் வேலையில் ஒதுக்கீடு கேட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
🍒🍒பள்ளிக்கல்வி மற்றும் காவல் துறைக்கு ரூ.132 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்
🍒🍒அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணிணி ஆய்வகம் அமைக்க நெறிமுறைகள் -  பள்ளி கல்வி துறை வெளியிடு
🍒🍒பெற்றோர், மருத்துவ சிகிச்சை செலவை பெற தகுதியில்லை என்ற காப்பீட்டு திட்ட விதி சட்டவிரோதமானது - உயர் நீதிமன்றம்
⛑⛑அரசுக்கு நிலம் கொடுத்ததற்காக ஆசிரியர் வேலையில் ஒதுக்கீடு கேட்க முடியாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
🍒🍒அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் 6000 ஹைடெக் ஆய்வகங்களை கண்காணிக்க கமிட்டி: பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
🍒🍒மத்திய அரசின் மக்கள் விரோத  கண்டித்து,  பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (08.01.2020)  நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
🍒🍒தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை ஜனவரி 10க்குள் அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு.
மாவட்ட முதன்மை மற்றும் அனைத்து கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பை பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.
🍒🍒10வது கல்விஆண்டு தொடங்கவுள்ள நிலையில் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள்  தமிழகஅரசிடம் வலியுறுத்தல் - தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
🍒🍒கல்வியில் சிறந்த பின்லாந்தில் அடுத்த அதிரடி!!வாரத்தில் 4 நாட்கள் விடுமுறை, தினமும் 6 மணி நேரம் மட்டும் வேலை
🍒🍒பொதுப் பயன்பாட்டுக்காக அரசு நிலத்தை கையகப்படுத்தும்போது நிலத்தின் உரிமையாளர் அதற்காக வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🍒🍒விரைவில் பணிநியமனம் வழங்கக் கோரி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறப்பாசிரியர்கள் போராட்டம்.
🍒🍒அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
🍒🍒சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள். 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 13-ஆம் தேதி முதல் விசாரணை
🍒🍒டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவிப்பு. அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைக்கும் என சிவோட்டர் கருத்துகணிப்பில் தகவல்.
🍒🍒ஒன்றிய தலைவர்களை தேர்வு செய்ய கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற அதிமுக, திமுக இடையே கடும் போட்டி. மறைமுகத் தேர்தலுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் உறுதி.
🍒🍒ஈரானுக்கு ஒருபோதும் அணு ஆயுதங்கள் கிடைக்காது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டம். ஈரானை மிரட்டவேண்டாம் என அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை.
🍒🍒பாகிஸ்தானில் நான்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு துணைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment