தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான விருப்பமறிதல் தேர்வு பள்ளிக்கல்வித்துறை முடிவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான விருப்பமறிதல் தேர்வு பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான விருப்பமறிதல் தேர்வு பள்ளிக்கல்வித்துறை முடிவு


வேலூர், ஜன.10: உயர்கல்வியை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை போக்கும் வகையில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பமறிதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இக்கு இணையான பாடத்திட்டம், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு, 

``நீட்'' தேர்வுக்கு இலவச பயிற்சி, சி.ஏ., தேர்வுக்கு ஆயத்த பயிற்சி என பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த வரிசையில், 10ம் வகுப்புக்கு பின், எந்த படிப்புக்கு செல்லலாம் என்ற குழப்பத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கும் வகையில், அவர்களுக்கு விருப்பமறிதல் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

மாணவர்களுக்கு எந்த பாடத்தில் விருப்பம் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் மூலமே கண்டறிந்து அவர்களுக்கு அந்த பாடம் தொடர்பான உயர்கல்வியை தேர்வு செய்ய இத்தகைய தேர்வு வழிவகை செய்யும் என்ற அடிப்படையில் இத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இத்தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் அரசு, நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக கணினி மூலம் நடத்தப்படுகிறது. தேர்வு 90 நிமிடங்களுக்கு 90 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருக்கும். வினாக்கள், கொள்குறி வகையில் இருக்கும். 

அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும். ஆனால், வினா வரிசைகள் மாறி இருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்த பட்சம் 20 மாணவர்கள் ஒன்றாக அமர வைக்கப்பட்டு, பள்ளிகளின் கணினி ஆய்வகத்தில் தேர்வுகள் நடத்தப்படும். 

இம்மாதம் இறுதி வாரம் தேர்வு நடத்தப்படுவதால், அதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.


School Education Department has decided to take a preference test for students of 9th and 10th grades in Tamil Nadu.

Rkollappattullana. Subsequent changes are being made. Several new programs have been implemented, such as the CBSE syllabus, the General Elections for Class I, Free Training for the 'Need' Exam, CA, Preparatory Training for Examination. 

In line with this, the school department has decided to take the opt-out option for students after class 10 to free them from the confusion of which course to pursue. 

The school department has decided to conduct this selection on the basis of their choice of the subject which they are most interested in and which will enable them to choose the higher education related to that lesson. 

This election is conducted by computer for government and sponsored school students in all districts separately. The choice will be to answer 90 questions in 90 minutes. The questions will be in the form of columns. All students will be given a common questionnaire. 

But, query rows are variable. At least 20 students will be seated in each section, and exams will be held in the school's computer lab. As the final week of the exam is held this month, the respective district school officials have begun preparations.

No comments:

Post a Comment

Please Comment