ஆசிரியருக்கு திட்டமிடல் அவசியம்: சி.இ.ஓ., அறிவுறுத்தல்
திருப்பூர்;பொங்கல் விடுமுறை வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை திட்டமிட்டு ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அறிவுறுத்தினார்.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், கடந்தாண்டு போலவே பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை தக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசானைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பேசியதாவது:பொதுத்தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகளுக்கு முக்கிய இடம் உண்டு. அடுத்த மாதம் செய்முறை தேர்வு துவக்க உள்ளதால், அரையாண்டு தேர்வில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பொங்கல் பண்டிகை விடுமுறை வருவதால் இனி வரும் காலத்தை ஆசிரியர்கள் மிகவும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்தி அவர்களை நல்ல மதிப்பெண் பெற ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களை பொதுத்தேர்வுக்கு உரிய முறையில் தயார்ப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
Planning is essential for the teacher: CEO, instruction
District Principal Education Officer Ramesh advised the teachers to guide the students who are writing the General Elections as the Pongal holiday is coming up.A consultation meeting for all high school and secondary school teachers was held yesterday at Jaiwabai Model Girls Secondary School.
In this regard, the head teachers were consulted on the likelihood of Tirupur district retaining the top spot in the general election pass rate as last year.Ramesh, District Principal Officer, said: “Government schools have an important place in the general election results.
Teachers should pay extra attention to disadvantaged students in the half-year exam, as the recipe selection is due to begin next month.With the Pongal holiday coming up, teachers need to plan ahead for the upcoming season.
Children with learning disabilities should be encouraged to get a good score.Students should be prepared for the general election.

No comments:
Post a Comment
Please Comment