புதிதாக விண்ணப்பித்த
90 ஆயிரம் விண்ணப்பதாரருக்கு குடும்ப அட்டை வழங்க முடிவு
அமைச்சர் காமராஜ் தகவல்
புதிதாக விண்ணப்பித்த 90 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் 35,233 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின் றன. புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்பட்ட 1 லட்சத்து 79,139 மனுக்களில், 1 லட்சத்து 38,838 மனுக்கள் பரிசீலனை செய்யப் பட்டு, 90,388 மனுக்கள் தகுதியின் அடிப்படையில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சரியான தகவல்கள், ஆவணங் கள் சேர்க்கப்படாத 48,450 மனுக் கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீத முள்ள மனுக்களையும் விரைவாக பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை கள் வழங்க தேவையான நடவடிக் கைகள் எடுக்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகளுடன் கைபேசி எண்ணை இணைக்கும் பணி 99.51 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது” என்றார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் கள் மற்றும் மண்டல உதவி ஆணையர்களின் பணிகளை ஆய்வுசெய்த அமைச்சர், பொது விநியோகத் திட்ட கிடங்குகள், அங் காடிகளை கண்காணிக்க அறி வுறுத்தினார்.
இதில் உணவு பொருள் வழங் கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப் புத் துறை ஆணையாளர் சஜ்ஜன் சிங் ஆர்.ஷவான், உணவு பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்கு நர் பிரதீப் வி.பிலிப் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Decision to issue family card to 90,000 applicants
Food Minister Kamaraj said steps have been taken to issue a new family card to 90,000 newly applied persons. A statewide consultation meeting with District Supply and Consumer Protection Department officials was held in Chennai yesterday under the patronage of Food Minister Ira Kamaraj.
The minister said, “35,233 fair shops are operating in Tamil Nadu. Of the 1 lakh 79,139 petitions received for new family cards, 1 lakh 38,838 have been reviewed and 90,388 petitions have been issued for eligibility. 48,450 petitions dismissed for lack of accurate information and documentation. The rest of the petitions will be reviewed quickly and action will be taken to provide the family card based on eligibility.
99.51 per cent work on connecting mobile phone numbers with electronic family cards has been completed. ” The Minister inspected the functions of the District Supply Officers and the Regional Assistant Commissioners and instructed them to monitor the Public Distribution Planning Warehouses and Caterpillars. Commissioner of Food Commodities and Consumer Protection Department Sajjan Singh R.Shawan and Food Commodity Criminal Investigation Department Director Pradeep V.Philip were also present.

No comments:
Post a Comment
Please Comment