வாக்காளர் சீட்டு இல்லாமல் செல்போனிலையே ஒட்டு போடலாம்.! அமலுக்கு வந்த புதிய முறை.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வாக்காளர் சீட்டு இல்லாமல் செல்போனிலையே ஒட்டு போடலாம்.! அமலுக்கு வந்த புதிய முறை.!

வாக்காளர் சீட்டு இல்லாமல் செல்போனிலையே ஒட்டு போடலாம்.! அமலுக்கு வந்த புதிய முறை.!




வாக்குச்சாவடிக்கு வாக்காளர் சீட்டை (பூத் ஸ்லிப்) எடுத்துச் செல்ல மறந்தவர்களுக்கு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். அவர்களுக்காக 'க்யூஆர்' கோட் வசதியை பயன்படுத்தி வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மொத்தமாக 11 மாவட்டங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதி வீதம் 11 தொகுதிகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி, வாக்காளர் சீட்டை (பூத் ஸ்லிப்) எடுத்துச் செல்ல மறந்த வாக்காளர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், வாக்காளர் உதவி மைய செயலியில் இருந்து 'க்யூஆர்' கோட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

பிறகு அதை 'ஸ்கேன்' செய்துவிட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். இதையடுத்து ஓட்டுப்பதிவு எந்திரம் உள்ள பகுதிக்கு சற்று தள்ளி ஸ்மார்ட்போனை வைத்து விட்டு வாக்களிக்க வேண்டும்.

டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, மொத்தமாக 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும். வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 ஆகும். 

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 80 லட்சத்து 55 ஆயிரத்து 686 பேர். பெண் வாக்காளர்கள் 66 லட்சத்து 35 ஆயிரத்து 635 பேர். மூன்றாம் பாலினத்தவர் 815 பேர் ஆவர். சென்ற ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடு செய்கையில் 9 லட்சத்து 96 ஆயிரம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக 72 வாக்குச்சாவடிகளும், பதற்றமானவையாக 3 ஆயிரத்து 209 வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 80 வயதை தாண்டிய மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்தே தபால் ஓட்டு வசதி அளிக்கப்பட உள்ளதாக ரன்பீர் சிங் தெரிவித்தார்.

Without a voter's card, you can put it on the cell phone. 

For those who have forgotten to carry a polling slip, they have a smartphone. For them, a new facility for voting using the QR Code has been introduced. The facility will be introduced in 11 constituencies in each of the 11 districts. 

Accordingly, voters who have forgotten to carry a voter slip (booth slip) have to download the QR Code from the Voter Assistance Center processor. It will then be 'scanned' and given permission to vote. After this, the voting machine should be pushed to the smartphone and left to vote. 

Delhi Chief Election Officer Ranbir Singh told reporters that 13 thousand 750 polling stations have been set up for the Delhi Assembly elections. The number of eligible voters is one million 46 lakhs 92 thousand 136. Of these, the male voters are 80 lakhs 55 thousand and 686.



Female voters 66 lakhs 35 thousand 635. There were 815 persons of the third sex. Compared to last year's voter list, the number of voters increased by 9 lakhs 96 thousand. 

72 ballots have been identified as likely to cause conflict between political parties and 3 thousand 209 polls have been identified as tense. Ranbir Singh said that postal voting facilities would be provided to transgender voters over 80 years of age.

No comments:

Post a Comment

Please Comment