கடின உழைப்பே வெற்றிக்கு வழி: மாணவரிடம் மோடி ஊக்க உரை
புதுடில்லி: 'கடின உழைப்பே வெற்றிக்கான வழி' என பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
டில்லியில் உள்ள டாக்கடோரா ஸ்டேடியத்தில் அனைத்து மாநில பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழகத்தை சேர்ந்த, 66 மாணவர்களும் பங்கேற்றனர். மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் மோடி பதில் அளித்தார். இதற்காக, கேள்வி கேட்கும் மாணவர்கள், தனியாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி, 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களில், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழகத்தில், பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் மாணவர்கள், இந்த உரையை கேட்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் மோடி உரையாற்றியதாவது: பிரதமராக நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஒவ்வொன்றும் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது.
ஆனால், உங்கள் இதயத்தை தொடும் நிகழ்ச்சி எது என யாராவது கேட்டால், இந்த நிகழ்ச்சியை தான் சொல்வேன். தேர்வு என்பது எனக்கு நெருக்கமானது. மாணவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை நான் எளிதாக புரிந்துகொள்வேன்.
நான் உங்களின் குடும்பத்தில் ஒருவர். என்னுடைய வார்த்தைகள் மாணவர்களின் வாழ்வில் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.சந்திரயான்-2க்கு பிறகு, எதுவும் எளிதல்ல என்பதை புரிந்து கொண்டேன். விஞ்ஞானிகளிடம் பேசினேன்; அவர்களை ஊக்கப்படுத்தினேன்.
வெற்றியின் முதல் படி தோல்வியே.
அதிலிருந்து கற்கும் பாடத்தில் தான் வெற்றி இருக்கிறது. 2002ம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ளே காயமடைந்தார். அனைவரும் அவர் விளையாட மாட்டார் என கவலையடைந்தனர்.
ஆனால், காயத்தையும் பொருட்படுத்தாமல், களத்தில் இறங்கி பந்துவீசினார்.
அவர் ஊக்கத்துடன் விளையாடியதால், ஒட்டுமொத்த சூழ்நிலையையும் மாறியது.ஒவ்வொருவரும் புதிதாய் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தை போல மற்ற துறைகளுக்குக்கும் மாணவர்கள் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இதன்மூலம் ரோபோட்டிக்ஸ் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடியும். சில பெற்றோர் இதனை டிரண்டாக கருதுகின்றனர்.
நமது வாழ்க்கை தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. கடின உழைப்பே வெற்றிக்கான வழி. நமது நேரத்தை எவ்வாறு பேலன்ஸ் செய்வது என்பதை நாம் அறிய வேண்டும். இவ்வாறு மோடி உரையாற்றினார்.
Hard work is the way to success: Modi encourages students
Prime Minister Modi addresses a gathering at the Dakotora Stadium in New Delhi to encourage students to write general elections: 'Hard work is the way to success'. 66 students from Tamil Nadu participated. Modi also answered students' questions and doubts.
For this, the students in question were selected separately. The show was broadcast live on 'TV' and on social networks. In Tamil Nadu, students of public schools writing public exams, special arrangements were made to listen to this speech. Each one has given me a new experience.
But if someone asks you which show touches your heart, I'd say this is the show. The choice is close to me. I can easily understand what students are feeling. I am one of your family. After Chandrayaan-2, I understood that nothing is easy.
Talked to scientists; I encouraged them. The first step to success is failure. The lesson is to learn from it. In 2002, India's bowler Kumble was injured during a cricket match against the West Indies. Everyone was worried he wouldn't play. But regardless of the injury, he got down and bowled.
As he played with diligence, the whole situation changed. Everyone had to learn something new. Students should be given equal importance in other disciplines like curriculum. With this you can discover new things like robotics.
Some parents view this as a trund. Our life is driven by technology. Hard work is the way to success. We need to know how to balance our time. Modi thus addressed.

No comments:
Post a Comment
Please Comment