கற்றாழையில் ஆரோக்கிய பானங்கள் செய்வது எப்படி தெரியுமா...?
கற்றாழைக்கு குமரி, என்ற பெயரும் உண்டு. கற்றாழையில் பலவகைகள் உண்டு. சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு.
இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சோற்றுக்கற்றாழை மடல்களைப் பிளந்து, கண்ணாடி போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் 7 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்.
கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் கசப்பும் குறைந்துவிடும்.
சுத்தப்படுத்திய நுங்குசுளைப்போல இருக்கும் கற்றாழைத் துண்டங்களை அப்படியே சாப்பிடவும் செய்யலாம். சாறு, சர்பத், அல்வா என்று விதவிதமாக சமைக்கிறார்கள்.
* கற்றாழை ஜூஸ்: மலிவு விலையில் மகத்தான பானம். உடற்சூட்டை உடனேத் தணிக்கும் இந்த பானம். தேவையான பொருட்கள்: கற்றாழை துண்டுகள், எலுமிச்சை, தேன்.
செய்முறை: சுத்த படுத்திய கற்றாழை துண்டுகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் தேவையான, எலுமிச்சை சாறு, நீர் மற்றும் இனிப்புக்காக பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.
* கற்றாழை லஸ்ஸி: தேவையான பொருட்கள்: சுத்தம் செய்த கற்றாழை துண்டுகள், இந்துப்பு, புதினா இலைகள், கட்டித் தயிர், ஐஸ் கட்டிகள்.
செய்முறை: மிக்ஸியில் கற்றாழையை நைசாக அரைத்து கொள்ளவும். இதனுடன் ஐஸ் கட்டிகள், தயிர், இந்துப்பு கலந்து அடிக்கவும். நுரைத்து ததும்பும் லஸ்ஸி பருக தயார்.
Do you know how to make healthy drinks in aloe vera?
There are many varieties of cactus. There are many varieties of aloe, small aloe, mackerel, gourd, agave, red pea, train aloe. The aloe vera is used for medicinal properties. Splutter the flask and cut the glass-like flesh into small pieces and rinse it with water 7 times.
If they touch the cactus with their hands, they will bite their mouths. If washed, the bitterness of the cactus will decrease. You can also eat the aloe vera that is like a purified foam. They cook different kinds of juice, sarbat and alwa.
* Cactus Juice: Great drink at affordable prices. This drink that instantly calms the body. Ingredients: aloe slices, lemon, honey.
Procedure: Mix the cleaned aloe slices into the mixer. You can also drink lemon juice, water and sweetened pancakes or honey.
* Cactus Lassi: Ingredients: Cleaned aloe slices, Hindutha, Mint leaves, Tart yoghurt, Ice lumps.
Procedure: Mix aloe vera in the mix. Add ice cream, yoghurt and Hindu. Ready to foam and drink lassi.

No comments:
Post a Comment
Please Comment