வைஃபை இருந்தா போதும்! பிரீயா கால் செய்யலாம்! ஜியோவின் அதிரடி அறிவிப்பு
சமீபத்தில் பாரதி ஏர்டெல் 'வைஃபை காலிங்' எனப்படும் வைஃபை மூலம் இலவச குரல் அழைப்புகளை செய்யும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை தொடங்கியது.
இப்போது, ரிலையன்ஸ் ஜியோவும் இந்தியாவில் வீடியோ மற்றும் வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) சேவையை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. அவரவர்களின் வீடுகள்/ அலுவலகங்களில் உள்ள வைஃபை இணைப்பை பயன்படுத்தி இலவசமாக ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்துகொள்ளலாம்.
"ஜியோ கடந்த சில மாதங்களாக இந்த சேவையை பரிசோதித்து வருகிறது, இது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிறைவான அனுபவத்தை அளிக்கும்," என்று ஜியோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜியோவின் இந்த சேவை தற்போது 150 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களில் நாடு முழுவதும் கிடைக்கிறது. தற்போதுள்ள ஜியோ தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வைஃபை மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் பெறலாம்.
உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்- Click
ஜியோ வைஃபை காலிங் வசதி 2020 ஜனவரி 7 முதல் 16 வரை இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும்.
இந்த சேவையை அறிமுகப்படுத்தியபோது, ஜியோவின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், "ஜியோவில், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த அல்லது அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
ஒவ்வொரு ஜியோ யூஸரும் மதம் 900 நிமிடங்களுக்கு ஆடியோ கால் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த 'வைஃபை காலிங்' வசதி மூலம் இனி அனைத்து அழைப்புகளையும் இலவசமாக செய்யும் வசதியைப் பெறுவார்கள்.
வைஃபை காலிங் வசதியை Enable செய்வது எப்படி?
Settings செல்லவும்
Wifi Calling என்ற option தேர்வு செய்யவும்
அதில் Wifi calling வசதியை on செய்யுங்கள்
VoLTE மற்றும் Wi-Fi Calling இரண்டையும் சுவிட்ச் ஆன் செய்தால் தடையில்லாமல் அனைத்து அழைப்புகளும் செய்யவும் பெறவும் முடியும்.
Wifi is enough! Freya can call!
Bio Airtel recently launched its 'WiFi Calling' WiFi offering its customers the ability to make free voice calls. Now, Reliance Jio also launched the VoWiFi service in India on Wednesday.
"Jio has been testing the service for the past few months, which gives every customer a satisfying experience," the company said in its statement. Jio's service is currently available on over 150 smartphones nationwide.
Customers can make and receive calls via Wi-Fi using the existing Geo Phone number. Click here to check if your smartphone has this feature - Click Geo Wifi Calling Facility will be launched across India from 7th to 16th January 2020.
Speaking at the launch, Jio's Director Akash Ambani said, "At Jio, we continue to work to improve the customer experience or solve their problems. Navigate to Settings Select the option Wifi Calling and turn on the Wifi Calling feature to switch on both VoLTE and Wi-Fi Calling.

No comments:
Post a Comment
Please Comment