ஆண்கள் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அழகு குறிப்புகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆண்கள் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அழகு குறிப்புகள்!

ஆண்கள் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அழகு குறிப்புகள்!


இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் சீக்கிரம் தூங்கி எழுங்கள். இதுவே உடல் நலத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும்.

சிலருக்கு முகப்பரு பிரச்னை இருக்கலாம். அதற்காக எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் கலந்து சருமத்தில் தடவுங்கள். சந்தனம், சாதிக்காய், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவலாம்.

தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் மறையும். பசும்பாலில் ஒரு ஸ்பூன் கசகசாவை சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவிவர ஆண்களின் வறண்ட சருமம் பளபளப்பாக மாறும்.

தினமும் அதிகாலை அத்திப்பழத்தை சாப்பிட்டு வரவும். ஒரு கிளாஸ் பாலில் தேன் கலந்து அருந்திவரலாம். இவை உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கி தசைகளை ரிலாக்ஸ் செய்து நாள் முழுவதும் நல்ல தெம்பான உணர்வை தரும். 

இதனால் சருமம் அழகாகும் மற்றும் உடல் பளபளப்பாகும். ஆப்பிள் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர கண்கள் பிரகாசமாக தெரியும். தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, 

நன்றாக குழைத்து உடம்பில் தடவி, பயத்தமாவு தேய்த்து குளித்தால், தோல் பளபளப்பாகும். சுருக்கங்கள் மறையும்.தினமும் இரவு தூங்குவதற்கு முன் சருமத்தில் ஆலிவ் ஆயிலை தடவி வந்தால் சருமம் மிருதுவாக இருக்கும். 

வாரம் ஒரு முறை சந்தனப் பொடியுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிவரலாம்.


Beauty Tips Men Need To Know! 

Get up early and stay awake at night. This is one of the most essential aspects of health. If the body and mind are healthy, it will reflect on the face. Some people may have acne problems. Mix two tablespoons of lemon juice with a spoon of honey and apply it to the skin. 

Sandalwood, nutmeg and pepper can be applied to the pasteurized toothpaste. If done regularly, the bark disappears. Add a spoon of peanut butter and soak it overnight and rub it on the face the next morning. You can drink honey in a glass of milk. 

They regulate the blood flow of the body and relax the muscles and give you a good feeling throughout the day. Thus the skin is beautiful and the body is shiny. Eyes of apple soaked in honey, eyes brightened. 

Add a little turmeric powder to the coconut oil, mix well and rub it on your body. If you apply olive oil to your skin before going to bed at night, your skin will be smooth. Once a week add a little almond oil to your face and rinse off with warm water after 20 minutes.

No comments:

Post a Comment

Please Comment