குழந்தைகளுகளுக்கு கட்டாயமாக இதை சொல்லி கொடுங்க..!!!"
ஆறில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது பழமொழி அதுபோல் குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில்என்ன சொல்லிக்கொடுகிறோமோ அதைத்தான் அவர்கள் காலம் முழுவதும் பின்பற்றுவார்கள்.
குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியமானது.
பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும்.
எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.
பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும்.
எவர்சில்வரில் செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்டிஃபன் பாக்ஸ்களும் கிடைக்கின்றன.
பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தவேண்டும்.
குழந்தைகளுக்கு நொறுக்குதீனிக்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும்.
காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள்.
இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவும்.
குழந்தைகளுக்கு சிலம்பம், நீச்சல், வில்வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுங்கள்.
குழந்தைகளின் வாசிப்பு திறன் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பு திறனை அவர்களுக்கு சொல்லிகொடுங்கள்.
மேலும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியம், பண்பாடு மற்றும் முன்னோர்களின் சிறப்புகள் போன்றவற்றை சொல்லிக்கொடுத்து வளர்ப்பது மிகவும் சிறந்தது.
"Children do not grow in fifties do not grow up"
Children need to be taught some good things from an early age. Exposure to chemicals in plastic and pet bottles and mixing with water. Therefore, children should avoid refilling such bottles. Children should be given water bottles made of aluminum and Eversilver.
Teach them to avoid using plastic as much as possible. The plastic box is not good. Hot foods may react with plastics and release bad chemicals. The Tiffany box made in Eversilver is good. Currently, the HotBack facility is available as a box.
Eating fruits and vegetables of various colors is good for health. They are very good for the physical development and health of children. Children should be accustomed to eating breakfast timely. Also, be advised to eat foods that are low in fat.
Children should be accustomed to eating whole grains instead of crumbling foods. This will greatly improve their physical growth. Adding a large amount of cereals to breakfast can help reduce the risk of diabetes and heart disease. Allow children to play their favorite games.
This will help them to keep their minds happy and their body healthy. Teach children exercises like swimming, archery, and gymnastics. Children’s reading skills play an important role in their success. Improve daily reading habits.
Teach your children the ability to read along with them. It is best to teach our children the traditions, culture and traditions of our ancestors.

No comments:
Post a Comment
Please Comment