முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ்ப் பற்றை வளர்க் கும் வகையில் கலை இலக்கிய போட்டிகளை சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல் லூரியின் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
மக்களுக்கு பலனளிக்கும் வகையில் ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல் லூரியின் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பல்வேறு பணிகளை மேற் கொண்டு வருகிறது.
இந்தச் சங்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தலைமை அதிகாரி கள் என 5,200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மாணவ, மாணவியர் மத்தியில் தமிழ் பற்றை வளர்க்கும் வகையில் ‘கலைக்களம்' என்ற பெயரில் கலை இலக்கியப் போட்டிகளை அறிவித்துள்ளது.
அதன்படி, மாநில அளவில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, நாட்டுப்புற இசை மற்றும் நடன போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 8 மண்டலங்களில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற் கும் வகையில் ஏற்பாடு செய்யப் படுகிறது. பிப்.2-ம் தேதி இந்த போட்டிகள் தொடங்குகின்றன.
சென்னை மண்டலத்துக்கான முதல் கட்ட போட்டிகள் பிப். 2-ம் தேதி, சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியில் நடக் கின்றன. மாநில அளவிலான இறுதி போட்டிகள் ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறி யியல் கல்லூரியில் பிப்ரவரி 23-ம் தேதி நடக்கின்றன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.irttalumni.org என்ற இணையதளத்தில் உள்ள ‘கலைக்களம்’ எனும் பகுதியில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களைப் பெற 95005 50650 என்ற செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக வெளிநாட்டு விமான சுற்றுலா வுடன், ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். இரண் டாம், மூன்றாம் பரிசுகளுக்கு உள்நாட்டு விமான சுற்றுலாவுடன் ரூ.5,000, ரூ.2,500 என பரிசு வழங் கப்படும். மற்ற அனைத்து போட்டிகளிலும் முதல், இரண் டாம், மூன்றாம் பரிசாக, உள்நாட்டு விமான சுற்றுலாவுடன், ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படுகிறது.
The Road and Transport Engineering Alumni Welfare Association has announced art and literary competitions on behalf of alumni welfare society to promote Tamil language among school and college students.
The Erode Road and Transport Engineering Coalition of Alumni Welfare Association of the Erode Road has been performing various tasks since 2016. The association has more than 5,200 members, including IAS and IPS officers and chief executives working in various private companies. Art Literary Competition has been announced under the name of 'Art Gallery' to promote the Tamil community among students and students. Accordingly, there will be speech, essay, painting, poetry, folk music and dance competitions at the state level. Students from all districts will be participating in 8 zones including Chennai, Thiruvannamalai, Trichy, Tirunelveli and Coimbatore.
The matches begin on February 2. First stage matches for Madras Zone Feb. On the 2nd, they will take place at the Snowmobile Engineering College, Chennai. The state-level finals will be held on February 23 at the Erode Road and Transportation Engineer College. Those who wish to take part in these competitions can register at the Art Gallery website at www.irttalumni.org. You can contact the cell phone number 95005 50650 for more information. The winner of the talk competition will receive a prize of Rs. Iron Tom and III will be awarded with Domestic Air Travel for Rs 5,000 and Rs 2,500 respectively. First and foremost in all other competitions, Iron Tom is awarded with a third prize, a domestic cash prize and a cash prize.

No comments:
Post a Comment
Please Comment