டிஎன்பிஎஸ்சி நடத்திய
துறை தேர்வுகளுக்கான விடைகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டிஎன்பிஎஸ்சி), 143 துறைத் தேர்வு களை கடந்த 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னை, டெல்லி உள்ளிட்ட 33 தேர்வு மையங்களில் நடத்தியது. இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடை கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) 28-ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருந்தால், பிப்ரவரி 4-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களது நுழைவுச்சீட்டு நகல், பதிவெண் உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மனுக்களை அனுப்பலாம். கடிதம் மூலமாக விண்ணப்பதாரர் மறுப்பு தகவல்களை தெரிவித்தால் ஏற்கப்படாது.
Publication of Answers to Departmental Examinations conducted by TNPSC
Tamil Nadu Government Employees' Examination (TNPSC) conducted 143 field exams from July 5 to 12 at 33 examination centers, including Chennai and Delhi. The proposed answer sheet with the questionnaires for these exams was published on the website (www.tnpsc.gov.in) on 28th (yesterday). Candidates who have written the exam can check the answers. If there is any disapproval of the proposed answers, you can send your resume to the email address contacttnpsc@gmail.com by 5 pm on February 4, clearly indicating your ticket copy and record. No refusal by the applicant by letter will be accepted.

No comments:
Post a Comment
Please Comment